முகப்பு »  நலவாழ்வு »  மலச்சிக்கலை தீர்க்கும் நார்ச்சத்துள்ள உணவுகள்

மலச்சிக்கலை தீர்க்கும் நார்ச்சத்துள்ள உணவுகள்

ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால் சமீபத்தில் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் டயட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய போதுமான நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை பட்டியலிட்டுள்ளார்.

மலச்சிக்கலை தீர்க்கும் நார்ச்சத்துள்ள உணவுகள்

மலச்சிக்கலுக்கு மிக முக்கிய காரணம் ஹைப்போ தைராய்டிசம் மற்றும் மன அழுத்தம் ஆகியவையாகும்

சிறப்பம்சங்கள்

  1. மலச்சிக்கல் நிச்சயமாக உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடியது.
  2. நார்ச்சத்து உணவு பொருட்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது
  3. உலர்ந்த ப்ளம் பழங்கள் செரிமான நலனை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கல் என்றால் என்ன தெரியுமா..? அன்றாடம் மலம் கழிக்காமல் நாட்களின் இடைவெளிகளுன் மலம் கழித்தலோ அல்லது மலம் வெளியேற்ற முடியாமல் சிக்கல் இருப்பதையே மலச்சிக்கல் என்கிறோம். மலச்சிக்கல் நிச்சயமாக உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடியது. மலச்சிக்கலுக்கு மிக முக்கிய காரணம் ஹைப்போ தைராய்டிசம் மற்றும் மன அழுத்தம் ஆகியவையாகும்.

பிராசஸ் செய்யப்பட்ட உணவுகள், நார்ச்சத்து இல்லாத உணவுகள், மற்றும் சாக்லேட் போன்றவை தைராய்டு பிரச்னைகளை அதிகப்படுத்துகிறது. ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால் சமீபத்தில் தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் டயட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய போதுமான நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை பட்டியலிட்டுள்ளார்.  

நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் மலச்சிக்கலை எப்படி தீர்க்கிறது?


நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஃபைபர் இரண்டு வகையாக உள்ளது. நார்ச்சத்து குடல் இயக்கம் மற்றும் ஒட்டு மொத்த சுகாதரத்திற்கும் உதவுகிறது.

ah4bqsno

1. பருப்பு வகைகள்
 

பருப்பு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை பீன்ஸ், பருப்பு மற்றும் பச்சை பட்டாணி ஆகியவற்றி நார்ச்சத்து உள்ளது. இவை குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாவை பாதுகாக்கிறது. 

2. ப்ரோக்கோலி 

ப்ரோக்கோலியில் வைட்டமின்கள் சி மற்றும் ஏ ஃபைபர் நிறைந்துள்ளது. இதில் ஆண்டியாக்ஸிடன்ஸ் மற்றும் பாலிபெனல்ஸ் உடலின் செரிமான நலனை மேம்படுத்துகிறது.

 3. பியர்ஸ்

பியர்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. விட்டமின் சி மற்றும் ஏ, ஃபோலேட் மற்றும் கால்சியமும் உள்ளது. பழ சாலட்களில் பியர்ஸும் பயன்படுத்துங்கள். 

4. ஆப்பிள்

ஆப்பிளில் விட்டமின் சி, ஏ  மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது. ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதே நல்லது. 

5. உலர்ந்த ப்ளம் பழங்கள்

ப்ளம் பழங்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. ஒபிசிட்டியைக் குறைத்து ஹைபர் டென்சனைக் கட்டுப்படுத்துகிறது. 

6. ஆரஞ்சு

சுவையான ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து உள்ளது. விட்டமின் சி அடங்கியுள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com