முகப்பு »  நலவாழ்வு »  பேரிச்சை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா??

பேரிச்சை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா??

பொட்டாஷியம், மக்னீஷியம், காப்பர், மாங்கனீஸ் மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.  

பேரிச்சை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா??

சிறப்பம்சங்கள்

  1. பேரிச்சை சாப்பிடுவதால் செரிமானம் மற்றும் மெட்டபாலிசம் சீராகும்.
  2. எலும்புகள் உறுதியாக இருக்க தினமும் பேரிச்சை சாப்பிடலாம்.
  3. பேரிச்சை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவும் சீராகிறது.

உடல் எடை குறைப்பு என்பது இங்கு பெரும்பாலானோர்க்கு சவாலான விஷயமாக இருக்கிறது.  உடல் எடை குறைக்க பொறுமை மற்றும் மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  உணவு பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை முறையாக பின்பற்றினாலே போதும்.  உடல் எடை குறைப்பிற்கு உகந்த உணவுகளை சாப்பிடுவதும் அவசியமானது.  அந்த வகையில் பேரிச்சை உடலுக்கு மிகவும் நல்லது.  உடல் எடையை விரைவாக குறைப்பதில் பேரிச்சைக்கு முக்கிய பங்கு உண்டு.  பேரிச்சையின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  

நார்ச்சத்து: 
பேரிச்சையில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், இதனை சாப்பிடும்போது நீங்கள் நாள் முழுக்க நிறைவாக உணர முடியும்.  செரிமானத்தை சீராக்கி, மெட்டபாலிசத்தை அதிகபடுத்தி உடல் எடை குறைக்க உதவுகிறது.  
 

dojva49g

புரதம்: 
உடல் எடை குறைப்பதற்கு புரதம் மிகவும் அத்யாவசியமான உணவு.  இது தசைகளின் வளர்ச்சிக்கு உறுதிக்கும் சிறந்த ஊட்டச்சத்தாக இருக்கிறது.  உடற்பயிற்சிக்கு பின் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல வடிவம் கிடைக்கிறது.  

இனிப்பு சுவை: 
நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இனிப்பு சுவை அதிகமாக இருந்தால் உடல் எடை குறையாது.  உடல் எடை குறைக்க நீங்கள் முதலில் இனிப்பு மிகுதியான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  ஆனால் பேரிச்சையில் இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுதியாக இருக்கிறது.  இதில் கலோரிகளும் மிக குறைவு என்பதால் உடல் எடை குறைக்க தினமும் பேரிச்சை சாப்பிடலாம்.  
 

b0f0asug

 நாள் ஒன்றிற்கு எத்தனை பேரிச்சை சாப்பிடலாம்: 
உடல் எடை குறைக்க எப்படிப்பட்ட உணவை சாப்பிட்டாலும் அளவாக சாப்பிட வேண்டும்.  அதேபோல பேரிச்சையை தினமும் 4-5 எண்ணிக்கையில் சாப்பிடலாம்.  பேரிச்சையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.  பொட்டாஷியம், மக்னீஷியம், காப்பர், மாங்கனீஸ் மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பேரிச்சை சாப்பிடுவதால் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தொடர்ச்சியாக பேரிச்சையை சாப்பிடுவதால் எலும்புகளும் உறுதியாகிறது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------