முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை குறைக்கக்கூடிய வித்தியாசமான ரெசிபிகளை ட்ரை செய்யலாம்!!

உடல் எடை குறைக்கக்கூடிய வித்தியாசமான ரெசிபிகளை ட்ரை செய்யலாம்!!

கீரைகள், காய்கறிகள், வெண்ணெய், ஹம்மஸ், கடுகு, ரெட் ஆனியன் மற்றும் எலுமிச்சை சேர்த்து பார்பிக்யூ சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.  ஆரோக்கியம் நிறைந்த இதுபோன்ற சாலட்களை செய்து சாப்பிடலாம்.  

உடல் எடை குறைக்கக்கூடிய வித்தியாசமான ரெசிபிகளை ட்ரை செய்யலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. உடல் எடை குறைக்க கேரட் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.
  2. மீன் மற்றும் ஸ்டீம்டு ரைஸ் சேர்த்து சாப்பிடலாம்.
  3. உடலில் கொழுப்புகளை குறைக்க இவற்றை சாப்பிடலாம்.

உடல் எடை குறைக்க பல முயற்சிகளில் இறங்கியிருப்போம்.  தூக்கம், பிடித்த ருசியான உணவு போன்றவற்றை தியாகம் செய்திருப்போம்.  ஊட்டச்சத்து நிறைந்த உணவை தேடி தேடி சாப்பிட்டு சலித்து போயிருப்போனவர்களும் உண்டு.  ருசியான உணவுகளை சாப்பிட்டும் உடல் எடை குறைக்கலாம் என்பதை எடுத்து கூறவே இந்த கட்டுரை.  

ஏசியன் சூப்: 
கேரட், மஷ்ரூம், பீன்ஸ், ஸ்கேலியன், சூக்கினி, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், ஒரு தேக்கரண்டி வெண்ணெய், உப்பு மற்றும் மிளகு ஆகியவை சேர்த்து ருசியான சூப் தயாரிக்கலாம்.  காய்கறிகள் வேகும்போது, ஸ்பாகெட்டி, சோயா சாஸ் சேர்க்கலாம்.  சிலேண்ட்ரோ, எலுமிச்சை மற்றும் துளசி சேர்த்து செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  மேலும் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது.  

ஸ்டீம்டு ரைஸ் வித் பார்பிக்யூ சாஸ்: 
மீனை ஆலிவ் எண்ணெயில் பொரித்து அத்துடன் காய்கறி மற்றும் பார்பிக்யூ சாஸ் சேர்த்து சமைக்கலாம்.  அதனை வேகவைத்த சாதத்துடன் அல்லது தயிருடன், சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.  


ப்யூரிட்டோ பௌல்ஸ்: 
செர்ரி டொமேட்டோ, ஜெலபினோ, சூக்கினி, ப்ரோக்கோலி, வெள்ளரி, வெங்காயம், கார்ன், ராஜ்மா ஆகியவற்றுடன் சோர் க்ரீம் சேர்த்து சாப்பிடலாம்.  இதனை மேலும் ஆரோக்கியமாக்க சீஸ் சேர்த்து சாப்பிடலாம்.  இது நாள் முழுக்க உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  

கிச்சடி:
அரிசி, பருப்பு, காய்கறிகள், மூலிகைகள் சேர்த்து ருசியான கிச்சடி செய்து சாப்பிடலாம்.  நெய், கிராம்பு, இஞ்சி, மஞ்சள் ஆகியவை சேர்த்து ருசியான கிச்சடி செய்து சாப்பிடலாம்.  

டோமேட்டோ பெஸ்டோ பாஸ்தா: 
கினோவா, சிவப்பு அரிசி அல்லது மரக்கோதுமை போன்றவற்றுடன் காய்கறிகள், வெண்ணெய், பெஸ்டோ சாஸ், சன் ட்ரைடு டொமேட்டோஸ், சீஸ் மற்றும் பாஸ்தா ஆகியவை சேர்த்து செய்யலாம்.  இதில் மேலும் சிக்கன் சேர்த்தும் சமைக்கலாம்.  

கினோவா ஸ்கில்லட்: 
கார்ன், தக்காளி, வெங்காயம், சூக்கினி, கேரட் ஆகியவற்றுடன் வேகவைத்து அத்துடன் கினோவாவையும் சேர்த்து சமைக்கலாம்.  அதில் சீஸ் சேர்த்து இன்னும் ஆரோக்கியமானதாக செய்து சாப்பிடலாம்.  

க்ரீன் சாலட்: 
கீரைகள், காய்கறிகள், வெண்ணெய், ஹம்மஸ், கடுகு, ரெட் ஆனியன் மற்றும் எலுமிச்சை சேர்த்து பார்பிக்யூ சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.  ஆரோக்கியம் நிறைந்த இதுபோன்ற சாலட்களை செய்து சாப்பிடலாம்.  


 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com