முகப்பு »  நலவாழ்வு »  வீட்டுத் தோட்டத்தில் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய 3 மருத்துவ செடிகள்!

வீட்டுத் தோட்டத்தில் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய 3 மருத்துவ செடிகள்!

உங்கள் தோட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய மூன்று சிறந்த தாவரங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மேலும், இவற்றைப் பயன்படுத்த பல்வேறு வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.

வீட்டுத் தோட்டத்தில் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய 3 மருத்துவ செடிகள்!

மருத்துவ மூலிகைகள் வீட்டிலேயே வளர்க்கப்படலாம் மற்றும் பல்வேறு சுகாதார பிரச்னைகளை எதிர்த்துப் போராட பயன்படுத்தலாம்.

சிறப்பம்சங்கள்

  1. துளசி இலைகள் தொண்டை புண் நீக்கும்
  2. கற்றாழை பொதுவாக சரும மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது
  3. கெமோமில் தேநீர் குடிப்பது சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது

உங்கள் வீட்டில் ஒரு சிறிய தோட்டம் பல வழிகளில் உதவியாக இருக்கும். தோட்டக்கலை ஒரு பொழுதுபோக்கை விட அதிகமாக உணர்வீர்கள். உங்களுக்கு மருத்துவ குணங்களை வழங்கக்கூடிய சில மூலிகைகளை வளர்க்கலாம். பழங்காலத்திலிருந்தே, ஆயுர்வேதம் மூலிகைகள் மற்றும் தாவரங்களை இயற்கையாகவே வெவ்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்துகிறது. தண்டு முதல் இலைகள் வரை பல தாவரங்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இவை சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கலாம் மற்றும் நோய்களைத் தடுக்க உதவும். இந்த கட்டுரையில், உங்கள் தோட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய மூன்று சிறந்த தாவரங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மேலும், இவற்றைப் பயன்படுத்த பல்வேறு வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகள்

1. துளசி


துளசிச் செடி ஒவ்வொரு இந்திய வீட்டிலும் இருக்கும் ஒரு தாவரம் ஆகும். இந்த செடி ஆயுர்வேத மருந்தாகச் செயல்படுகிறது மற்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளை எதிர்த்துப் போராடத் துளசி இலைகளைப் பயன்படுத்தலாம். இது செரிமானத்திற்கும் நல்லது. துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். நீங்கள் ஒவ்வொரு நாளும் 3-4 புதிய துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். இந்த இலைகளைத் தேநீர் அல்லது பானங்களில் சேர்க்கலாம். துளசி தேநீர் என்பது ஒரு நறுமணப் பானமாகும்.

2. கற்றாழை

பலர் கற்றாழையை தங்கள் மேசைகளில் அல்லது வீட்டில் அலங்காரமாகப் பயன்படுத்துகிறார்கள். கற்றாழை ஆரோக்கியத்தின் நன்மைகளும் மிகவும் பிரபலமாக உள்ளன. துளசியைப் போலவே, கற்றாழை ஒரு கட்டாயமாக இருக்க வேண்டும். பல உடல்நலப் பிரச்னைகளை எதிர்த்துப் போராடக் கற்றாழை ஒரு பயனுள்ள வீட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை உங்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. ஃபிரஷ் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது. வேகமாகக் குணமடைய, காயங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். வயிற்று வலி, மலச்சிக்கல், அமிலத்தன்மை, அசீரணம் மற்றும் பல செரிமான பிரச்னைகளுக்கு எதிராகப் போராடக் கற்றாழை சாற்றை உட்கொள்ளலாம்.

8p0qft18


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

3. கெமோமில்

கெமோமில் பொதுவாகத் தேநீர் தயாரிக்கப் பயன்படுகிறது. இது பலவிதமான சுகாதார நலன்களை வழங்க முடியும். இது மாதவிடாய் அசவுகரியத்தை அகற்ற உதவும். இந்த தேநீர் குடிப்பது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைத் தடுக்கவும் உதவும். கெமோமில் தேநீர் தூக்கமின்மையைப் போக்க, உங்கள் மனதிலும் உடலிலும் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும். இந்த தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு உணவாகும், ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------