முகப்பு »  நீரிழிவு »  உங்கள் மதிய உணவை ப்ரோட்டீன் நிறைந்ததா?

உங்கள் மதிய உணவை ப்ரோட்டீன் நிறைந்ததா?

யோகர்ட், பெர்ரிஸ், சர்க்கரை அதிகப்படுத்தாத பழங்கள், ஸ்மூத்திஸ் நல்லது.

உங்கள் மதிய உணவை ப்ரோட்டீன் நிறைந்ததா?

Yoghurt is rich in calcium and probiotics.

சிறப்பம்சங்கள்

  1. Diabetes is a condition which occurs when blood sugar is above 180 mg/dL
  2. Mid-day snack should be consumed in small quantities
  3. One such snack can be yoghurt with berries or any other fruits

டயாபடீஸ் ஒரு நாட்பட்ட வியாதி. டயாபடீஸ் இருப்பவர்கள் உணவு முறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அடிக்கடி அவர்களின் ரத்தத்தின் சர்க்கரை அளவை சரிபார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இரத்தத்தி சர்க்கரை அளவு 180mg/dLக்கு அதிமாகும்போது சர்க்கரைநோய் வருகிறது. அதிகமாக ரத்ததில் சர்க்கரை சேரும்போது உடலில் பலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால் முக்கியமானப் பிரச்னை கண் பார்வை, கிட்னி, ஃபுட் அல்சர், இதய நோய் நரம்பு மண்டலம் பாதுப்பு என இன்னும் ஏராளம். வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த சர்க்கரை நோய் இப்பொழுது புற்றீசல் போல பரவி வருகிறது. 

ஆரோகியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதிலும் தேவையான அளவு உணவு மிகவும் முக்கியம். அதனாலேயே இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை அவர்கள் சாப்பிட வேண்டும். காலை, மதிய இரவு உணவு தவிர்த்து இடைஇடையே ஹெல்த்தியான ஸ்னாக்ஸை அவர் எடுத்துக் கொள்வது நல்லது. மதிய உண்வை அவர்கள் குறைந்த அளவும், அதே சமயம் சத்தான ஒன்றை சாப்பிடுவது சிறந்தது. 

யோகர்ட், பெர்ரிஸ், சர்க்கரை அதிகப்படுத்தாத பழங்கள், ஸ்மூத்திஸ் நல்லது. யோகர்ட்டில் கால்சியம் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் உள்ளது. இது உடல் வலிமைக்கு நல்லது. இதில் உள்ள ப்ரோட்டீன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது.


பழங்களில் பெர்ரீஸ் ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடட்ன்ட்களாக இருக்கிறது, இதன் மூலம் மனசிதைவைப் போக்கலாம். இன்சுலின் சுரக்கவும் இதன் பங்கு அதிகம். பெர்ரீஸில் நார்ச்சத்து, செரிமானப் பிரச்னைக்கு ஏற்றது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி நிறைந்தது. ஆப்பிள், சிட்ரஸ் பழங்கள், மெலன்ஸ்,  திராட்சை, கொய்யா, கிவி, பப்பாயா மற்றும் மாம்பழம் சர்க்கரைநோயாளிகளுக்கு ஏற்றது. அடுத்தமுறை உங்களுக்கு பசித்தால் இதில் ஏதாவது ஒரு பழத்தை யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதில் நட்ஸ்களையும் சேர்த்து ஆரோக்கியமாகவும் சாப்பிடுங்கள். நட்ஸ்களில் பாதாம், வால்நட்ஸ் ஒரு சிறந்தத் தீர்வு. நட்ஸில் உள்ள சத்துக்கள் டயாபடீஸ்க்கு ஒரு சிறந்த உணவாகும். யோகர்ட் சாப்பிடும்போது சர்க்கரையோ அல்லது, செயற்கை இன்ப்பூட்டிகளையோ அறவே தவிர்த்திடுங்கள். ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்!

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------