முகப்பு »  புற்றுநோய் »  நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் 5 உணவுகள் இதோ!!

நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் 5 உணவுகள் இதோ!!

மீன்களை அடிக்கடி சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.  வாரத்தில் இரண்டு நாட்கள் கொழுப்பு சத்து நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.  

நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் 5 உணவுகள் இதோ!!

சிறப்பம்சங்கள்

  1. நுரையீரல் பிரச்னைகளை அலட்சியப்படுத்துவது மிகவும் தவறான விஷயம்.
  2. உணவு பழக்கத்தை மாற்றும்போது நுரையீரல் ஆரோக்கியம் சீராகும்.
  3. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வாரம் இரண்டு நாட்கள் மீன் சாப்பிடலாம்.

நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளுள் ஒன்று நுரையீரல்.  நுரையீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் பெருங்குடலும் பாதிக்கப்படும்.  சுற்றுச்சூழல் மாசு, புகைப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவற்றால் நுரையீரல் பாதிக்கப்படும்.  இவற்றால் தொடர்ச்சியாக பாதிப்பு ஏற்படும்போது நுரையீரல் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு அதிகமாக உள்ளது.  நுரையீரல் புற்றுநோயை தடுக்க புகைப்பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும்.  பிறகு வாழ்வியல் முறையிலும், உணவு பழக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோயை தடுக்க முடியும்.  

பூண்டு: 
தினமும் உங்கள் உணவில் பூண்டு சேர்த்து கொள்ளுங்கள்.  பூண்டில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால் பண்டைக்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.  பூண்டில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருப்பதால் வேகவைக்காமல் அப்படியே சாப்பிடலாம்.  தினமும் பூண்டை உணவில் சேர்த்து கொள்வதால் 44 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய் அபாயம் தடுக்கப்படுகிறது.  

கீரை: 
கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும்.  அடிக்கடி உணவில் கீரை சேர்த்து கொள்வதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தடுக்கப்படுகிறது.  கீரைகளில் லூடின் என்னும் ஊட்டச்சத்து இருப்பதால் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும்.  


c2t64sno

கோதுமை: 
காய்கறிகள் மட்டுமின்றி முழுதானியங்களும் புற்றுநோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.  முழுகோதுமையில் வைட்டமின் ஈ இருப்பதால் நீரிழிவு நோய் சீராவதுடன், மெட்டபாலிசம் அதிகரித்து, தசைகளின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.  நுரையீரல் ஆரோக்கியத்திற்கு கோதுமையை அதிகம் சேர்த்து கொள்ளலாம். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

வெங்காயம்: 
வெங்காயத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் அதிகமாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதுடன், செரிமான கோளாறுகளும் குணமாகும்.   உணவில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து கொண்டால் உடலில் வீக்கம் மற்றும் புற்றுநோய் அபாயம் தடுக்கப்படுகிறது. 

மீன்: 
கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 அதிகமாக இருக்கும்.  இதுபோன்ற மீன்களை அடிக்கடி சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.  வாரத்தில் இரண்டு நாட்கள் கொழுப்பு சத்து நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------