முகப்பு »  புற்றுநோய் »  பல்பசையில் இருக்கும் பொருளினால் ஏற்படும் குடல் புற்று நோய்

பல்பசையில் இருக்கும் பொருளினால் ஏற்படும் குடல் புற்று நோய்

எலிகளின் மேல் சோதனை செய்த இந்த ஆய்வு  'சயின்ஸ் ட்ரான்ஸ்லஷனல் மெடிசின்' பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

பல்பசையில் இருக்கும் பொருளினால் ஏற்படும் குடல் புற்று நோய்

சிறப்பம்சங்கள்

  1. ட்ரைக்ளோசன் உபயோகிப்பதால் புற்று நோய் அல்லது பெருங்குடல் வீக்கம் உண்டாகும
  2. ஆய்வின் முடிவில்,எலியின் குடல் பகுதியில் வீக்கம் இருப்பதை உறுதி செய்தனர்
  3. ட்ரைக்ளோசன் மூலம் நம் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம்

பல் பசை, சோப்பு போன்ற பொருட்களில் இருக்கும் ட்ரைக்ளோசன், புற்றுநோய் மற்றும் பெருங்குடல் வீக்கம் உண்டாக்குகிறது.எலிகளின் மேல் சோதனை செய்த இந்த ஆய்வு  'சயின்ஸ் ட்ரான்ஸ்லஷனல் மெடிசின்' பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

"ட்ரைக்ளோசனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடல் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகின்றன." என்று குவாடங் சாங், மசாசுசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) கூறினார்.

முன்னதாக ஆய்வில், ட்ரைக்ளோசன் அதிக அளவில் உபயோகப்படுத்தி இருந்தால் பாதிப்புகள் இருக்கும் என குறிப்பிடபட்டிருந்தது. ஆனால், குறைந்த அளவில் ட்ரைக்ளோசன் உபயோகத்தில் உள்ளோருக்கு இருக்கும் பாதிப்பு குறித்து தெளிவான தகவல்கள் இல்லை


புதிய ஆய்விற்காக, வெவ்வேறு அளவுகளில் ட்ரைக்ளோசன் கொண்ட உணவுகளை  மூன்று வாரங்களுக்கு எலிக்கு அளித்து சோதித்தனர்.

ஆய்வின் முடிவில், குடல் பகுதியில் வீக்கம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், குறைந்த அளவு ட்ரைக்ளோசன் இருந்த போது, வயிற்று சார்ந்த நோய்கள் தாக்கியதையும் உறுதி செய்துள்ளனர்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

இருந்தாலும், எலியின் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியா  அளவினை குறைத்தது மட்டுமின்றி, நோயற்ற எலியை பாக்ட்டீரியாவிடம் இருந்து காத்து கொண்டதாகவும் கூறினர். மேலும், ட்ரைக்ளோசன் குறித்து மனித உடல்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

"உலகின் பல பொருட்களில் ட்ரைக்ளோசன் உபயோகிக்கப்படுகிறது. எனவே, அது குறித்த பாதுப்பகளை உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்." என்று ஹேக்சிய யாங், பல்கலைக்கழக முனைவர் கூறினார்.(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------