முகப்பு »  தோல் »  சிரங்குப் பிரச்னையா? ஒரு வித்தியாசமான தீர்வு

சிரங்குப் பிரச்னையா? ஒரு வித்தியாசமான தீர்வு

மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் ஆண்களை விட இந்த சிரங்குப் பிரச்னை பெண்களைத்தான் அதிகம் பாதிக்குமாம்

சிரங்குப் பிரச்னையா? ஒரு வித்தியாசமான தீர்வு

கண்களைச் சுற்றி, கழுத்துப் பகுதிகளில், காது மடல்களின் ஓரத்தில் என சிரங்குப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சொரிந்து சொரிந்து நமது தோல் பகுதியே சிவந்துவிடும். நமது தோல் பகுதியே நமக்கு அலர்ஜியாகத் தோன்றும். இதற்காக எத்தனைக் கிரீம்கள் வாங்கிப் பூசினாலும் தற்காலிகமாக ஒரு தீர்வைத் தரும். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் சிரங்கும், அரிப்பும் தொடர் கதையாகிவிடும்.

இதற்காக அமெரிக்காவில் ஒரு புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையிலான சிகிச்சை முறை செயல்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, நல்ல ஆரோக்கியமான தோல் பகுதி உடையவர்களின் தோல் மேல்பறப்பில் ஒரு வகை பாக்டீரியா இருக்குமாம். அந்த நன்மை செய்யும் பாக்டீரியாவை சிரங்கு பாதித்த தோல் பகுதியில் தடவுவதுதான் தற்போது சொரி, சிரங்குப் பிரச்னைகளுக்குத் தீர்வாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க தேசிய அலர்ஜி மற்றும் தொற்று வியாதிகள் மையத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த நன்மை செய்யும் பாக்டீரியாதான் சிரங்குப் பிரச்னைகளுக்குத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. அதாவது சிரங்கு பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் ஆரோக்கியமான தோல் கொண்ட மற்றருவருடைய தோலின் மேல்பரப்பில் உள்ள ரோசோமோனஸ் முகோசா என்னும் பாக்டீரியாவை பூசியுள்ளனர். இதன் பின்னர் சில வாரங்களிலேயே சிரங்கு பாதிப்பு உள்ள தோல் முற்றிலும் குணமடைந்து காணப்பட்டதாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிகிச்சை முறையை கூடுதல் நவீனப்படுத்துதல் முயற்சியில் மருத்துவ ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.


சிரங்குப் பிரச்னை என்பது தோல் தன்னுடைய பணியைச் சரிவர செய்யவில்லை எனில் ஏற்படும் பாதிப்பு ஆகும். தோலின் நீர்ப்பதத்தை சரியாக தக்கவைத்துக் கொள்ளாமல் தோல் செயலிழக்கும் போது கெடுதல் செய்யும் பாக்டீரியாக்கள் தோல் வழியாக உடலுக்குள் ஊடுறுவுகின்றன. இதுதான் தோல் பகுதியின் ஆரோக்கியத்தைப் பாதித்து வறண்ட தோல், வீக்கம், சொரி, சிரங்கு ஆகியப் பிரச்னைகளை வழிவகுத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் ஆண்களை விட இந்த சிரங்குப் பிரச்னை பெண்களைத்தான் அதிகம் பாதிக்குமாம். குறிப்பாக பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் தருவாயில் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் மற்ற கண்டங்களைச் சார்ந்தவர்களைக் காட்டிலும் ஆசிய கண்டத்தாருக்கு சிரங்கு பாதிப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------