முகப்பு »  செய்தி »  வாய் புண் பிரச்சனையை சரி செய்ய புதிய மருந்து

வாய் புண் பிரச்சனையை சரி செய்ய புதிய மருந்து

புண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து விரைவில் குணமடையும் வகையில் இந்த பிளாஸ்திரி வேலை செய்யும்.

வாய் புண் பிரச்சனையை சரி செய்ய புதிய மருந்து

பொதுவாக வாய் புண்களினால் ஏற்படும் வலி குறைய இந்த பிளாஸ்திரிகள் செயல்படும்

சிறப்பம்சங்கள்

  1. வாய் புண் பிரச்சனைகளுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  2. புண் பட்ட இடத்தை விரைவில் குணமடைய செய்கிறது இந்த பிளாஸ்திரி மருந்து
  3. மவுத் வாஷ்களுக்கு பதிலாக பிளாஸ்திரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஓரல் அல்சர் எனப்படும் வாய் புண் பிரச்சனைக்கு ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். வாயில் புண் ஏற்பட்டுள்ள இடத்தில் ஒட்டும் வகையிலான, மக்கும் பிளாஸ்திரியை உருவாக்கியுள்ளனர். புண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து விரைவில் குணமடையும் வகையில் இந்த பிளாஸ்திரி வேலை செய்யும்.

வாய் புண் பிரச்சனைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஆயின்மெண்டுகள், மவுத் வாஷ்கள் புண் பட்ட இடத்தை கண்டறிந்து செயல்பட தாமதமாகின்றது. சீராக குணப்படுத்துவதும் தடைப்படுகிறது.

"பிளாஸ்திரி வகை மருந்து, புண் பட்ட இடத்தை சரியாக கண்டறிந்து சீரான சிகிச்சை அளிக்கும். பொதுவாக வாய் புண்களினால் ஏற்படும் வலி குறைய இந்த பிளாஸ்திரிகள் செயல்படும்" என்று கிரேய்க் முர்டோச் என்ற ஷெப்பெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் தெரிவித்தார்.

இது புதிய கண்டுபிடிப்பு பயோமெட்டீரியல் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. அதில், பிளாஸ்திரையை பயன்படுத்தி நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டதாகவும், அதை பயனப்டுத்திய நோயாளிகள், பிளாஸ்திரியை வசதியாக பயன்படுத்த முடிவதாகவும், புண் விரைவில் குணமடைவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------