முகப்பு »  நலவாழ்வு »  நம்மை மகிழ்ச்சியாக வைக்கச் செய்யும் ஹார்மோன்களை எப்படி தூண்டலாம்?

நம்மை மகிழ்ச்சியாக வைக்கச் செய்யும் ஹார்மோன்களை எப்படி தூண்டலாம்?

டோபமைன், எண்டோர்பின், ஆக்ஸிடாஸின் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களைத் தூண்டுவது எப்படி?

நம்மை மகிழ்ச்சியாக வைக்கச் செய்யும் ஹார்மோன்களை எப்படி தூண்டலாம்?

நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும் சில ஹார்மோன்கள் உள்ளன.

சிறப்பம்சங்கள்

  1. Regular exercise can help in releasing endorphins
  2. Meditation can help in releasing serotonin or mood stabilising hormone
  3. Dopamine is the reward hormone which is released when you complete a task

பொதுவாக நமது உடலுக்கும் மனதிற்கும் நேரடியாக நெருங்கிய தொடர்பு உண்டு. நமது உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள்தான் நமது உணர்வுகளாக தோன்றுகின்றன. உதாரணத்திற்கு இப்போது நீங்கள் நல்ல புளிப்பான எலுமிச்சை சாறு, புளி போன்றவற்றை கற்பனை செய்தாலே போதும். உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் அதற்கான உணர்வுகளை வெளிப்படுத்திவிடும். இதனால் புளியை சுவைக்காமலே, நாவில் புளிப்புச் சுவையும், எச்சிலும் ஊறும்.

இதே போல் பயம் உணர்வு ஏற்பட்டால் வயிற்றைக் கலக்குவது, சோக நினைவுகளை நினைத்தால் கண்ணீர் வருவது போன்ற அனைத்தும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 

அந்த வகையில், நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும் சில ஹார்மோன்கள் உள்ளன. அவை டோபமைன், எண்டோர்பின், ஆக்ஸிடாஸின் மற்றும் செரோடோனின் ஆகும்.

  • டோபமைன்: பெருமை, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் 
  • எண்டோர்பின்: மன உளைச்சலிலிருந்து விடுபட உதவுகிறது
  • ஆக்ஸிடாஸின்: அன்பு, பரிவு ஆகியவற்றைத் தூண்டுகிறது
  • செரோடோனின்: தியான நிலையில் இயற்கையை உணரச் செய்யும் ஹார்மோன்

டோபமைன், எண்டோர்பின், ஆக்ஸிடாஸின் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களைத் தூண்டுவது எப்படி? நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி?

1. தினந்தோறும் உடற்பயிற்சி, தியானம் செய்ய வேண்டும். இது உடல் அளவாலும், மன அளவாலும் திடகார்த்தமாக இருக்க உதவும்

2. ஏதாவது பயனுள்ள காரியங்களைச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கைவினைப் பொருட்கள், சமையல், ஓவியம் போன்றவை

3. பாட்டு, இசை கேட்க வேண்டும். இது டோபாமைன் ஹார்மோனைச் சுரந்து உங்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. 

4. தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பு தியனாம் செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் டோபோமைன், செரோடோனினைச் சுரக்கச் செய்யும். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

5. நன்றாக உறங்க வேண்டும். அதற்காக நீண்ட நேரம் உறங்கக் கூடாது. 7 மணி நேரம் உறங்கினாலே, அந்த 7 மணி நேரமும் எந்த கெட்டக் கனவும், சிந்தனையும் இல்லாமல் உறங்க வேண்டும். இது உடலுக்குத் தேவையான சக்திகளை அளித்து, புத்துணர்ச்சி கொடுக்கும். 

6. எதிர்மறை சிந்தனைகளை ஒருபோதும் நினைக்கக் கூடாது. நடந்த முடிந்த கவலைகளை நினைத்து வருந்தவும் கூடாது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------