முகப்பு »  நலவாழ்வு »  எந்த உப்பு சிறந்தது?

எந்த உப்பு சிறந்தது?

ஒவ்வொருவரின் உடலுக்கும் சராசரியாக ஒரு நாளைக்கு 100 முதல் 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது.

எந்த உப்பு சிறந்தது?

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னரே சொல்லிச் சென்றுள்ளனர். அதேபோல் உப்புக்காக யுத்தங்களும் நடந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். உணவின் அடிப்படையான சுவை உப்பு. இந்த உப்பு சுவை இல்லாமல் எந்த உணவையும் நம்மால் சாப்பிட முடியாது. வீட்டில் மளிகை சாமான் லிஸ்டில் முதல் இடம் உப்பிற்கே. அறுசுவையில் உப்பின் உபயோகம் சற்று அதிகமாகவே இருக்கும். இப்போது கல் உப்பு நல்லதா தூள் உப்பு நல்லதா? எது ஆரோக்கியமானது என்ற விவாதத்திற்கு வருவோம்.

o1s2ln7

தூள் உப்பு மற்றும் கல் உப்பின் வேறுபாடுகளை துல்லியமாக அறிவது சற்றே கடினமான ஒன்றுதான். ஏனென்றால், இவை இரண்டுமே ருசியில், வடிவத்தில் மற்றும் தயாரிப்புகளில் மாறுபடுகிறது. கடல் நீரை பாத்தி கட்டி உப்பு தயாரிக்கும் முறை தொன்று தொட்டே நம் மண்ணில் இருந்து வருகிறது. கடல் நீரை ஆவியாக்குவதன் மூலம் கல் உப்பு தயாரிக்கப்படுகிறது. இப்படி செய்யும்போது சில மினரல்ஸ் அதில் அப்படியே தங்கி உப்புக்கான தனி சுவையையும் நிறத்தையும் உண்டாக்கும். நம் அரசாங்கம், உப்பில் அயோடின் கலக்க வேண்டும் என்று சொல்லி இருப்பதால், இந்த கல் உப்பு சில செயல்முறைகளுக்குப் பின் அயோடின் கலக்கப்பட்டு தூள் உப்பாக வந்து சேர்கிறது.


மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் “தைராக்ஸின்” ஹார்மோன் உதவுகிறது. அயோடின் அளவு இரத்தத்தில் குறைந்தால், தைராய்டு ஹார்மோனின் உற்பத்தி பாதிக்கப்படும். கல் உப்பு மற்றும் தூள் உப்பு ஆகிய இரண்டிலுமே சோடியம் க்ளோரைடு நிறைந்துள்ளது. ஒவ்வொருவரின் உடலுக்கும் சராசரியாக ஒரு நாளைக்கு 100 முதல் 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உப்பு இருப்பின் அது உடல் உபாதைகளை ஏற்படுத்தும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள் உப்பு பயன்பாட்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

vvglgqeg

கல் உப்பு மற்றும் தூள் உப்பு ஆகிய இரண்டும் ருசியில் மட்டும் மாறுபடுகிறதே தவிர ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டிலும் சோடியம் நிறைந்திருக்கிறது என்பதால் நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை மட்டுமே உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கு கல் உப்பே அனைவரின் தேர்வாக இருக்கிறது. ஏனென்றால் தூளுப்பு பளீர் நிறத்தில் இருக்க உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே அதன் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள். இனி கல் உப்பை வாங்கி ஒரு பெரிய வாணலியில் போட்டு மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதனையே சமையலுக்கு பயன்படுத்துங்கள். தேவையென்றால் அதனை பொடியாக அரைத்தும் பயன்படுத்தலாம்

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com