முகப்பு »  நலவாழ்வு »  நுரையீரலை சுத்தம் செய்ய இவை உதவும்!!

நுரையீரலை சுத்தம் செய்ய இவை உதவும்!!

தேனில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருப்பதால் சுவாச பாதையில் ஏற்படும் நோய் தொற்றை போக்கிவிடும்.  தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் ஆகியவற்றை குணப்படுத்த தேன் சாப்பிடலாம். 

நுரையீரலை சுத்தம் செய்ய இவை உதவும்!!

சிறப்பம்சங்கள்

  1. பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகு சேர்த்து குடித்து வரலாம்.
  2. தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் குடித்து வரலாம்.
  3. உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் சளி தொல்லை இருக்காது.

புவி அதிகபடியாக மாசு பட்டுக்கொண்டிருக்கிறது.  நாம் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள், தொழிற்சாலைகள், கழிவுகள் போன்றவற்றால் நாளுக்கு நாள் காற்று மாசடைந்து கொண்டிருக்கிறது.  இதனால் புவி வெப்பமயமாகிறது.  குறிப்பாக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் காற்று மாசு அதிகபடியாக உள்ளது.  இதனால் சுவாச கோளாறுகள், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் போன்றவை ஏற்படுகிறது.  நுரையீரலை சுத்தப்படுத்தவும், பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் இவற்றை பின்பற்றி வரலாம். 

thgppujo


1. வெந்நீர்:

நாள் முழுக்க தொடர்ச்சியாக வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து கொண்டே இருக்கலாம்.  வெந்நீர் தவிர ஹெர்பல் டீ, சூப், க்ரீன் டீ மற்றும் வெஜிடபிள் ப்ரோத் போன்றவற்றையும் சூடாக குடித்து வரலாம்.  இதனால் நுரையீரல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.  

2. வாய் கொப்பளித்தல்: 

காற்று மாசுப்பட்டிருப்பதால் நுரையீரலில் பாதிப்பு உண்டாகி சுவாசம் சீராக இல்லாமல் இருப்பதுபோல் உணர்ந்தால், வெந்நீரில் உப்பு சேர்த்து, நாள் ஒன்றிற்கு மூன்று முறை வாய் கொப்பளிக்கலாம்.  மிக குறைவான நேரத்தில் சுவாசத்தை சீராக்கும். 

1eooar1g

3. பால்:

நுரையீரலில் அசௌகரியம் ஏற்பட்டால் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம்.  அதில் சிறிதளவு தேன் சேர்த்தும் குடிக்கலாம்.  அல்லது பாலில் மிளகு தூல், தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வரலாம்.  மஞ்சள் தூளில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் தொற்றை போக்கிவிடும்.  மிளகு செரிமானத்தை சீராக வைத்திருக்கும்.  இதனை குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லை குணமாகும்.  

4. தேன்: 

தேனில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருப்பதால் சுவாச பாதையில் ஏற்படும் நோய் தொற்றை போக்கிவிடும்.  தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் ஆகியவற்றை குணப்படுத்த தேன் சாப்பிடலாம்.  எலுமிச்சையில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலை குடித்து வரலாம். 

aqa1p61o

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------