முகப்பு »  நலவாழ்வு »  தூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக!!

தூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக!!

மக்னீஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும். 

தூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக!!

சிறப்பம்சங்கள்

  1. தூக்கமின்மை பிரச்னை உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
  2. மசாஜ் செய்து வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.
  3. மக்னீஷியம் நிறைந்த உணவுகள் தூக்கமின்மை பிரச்னையை போக்கும்.

இரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் இல்லாதுபோனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.  மேலும் நோய் தொற்று கிருமிகளால் உடலில் ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படும்.  ஒழுங்கற்ற தூக்கம் காரணமாக உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சீரற்றதாகிவிடும்.  உடலில் இருக்கக்கூடிய முக்கிய உறுப்புகள் அனைத்துமே அதன் ஆற்றலை இழந்துவிடும்.  தூக்கமின்மை பிரச்னையை போக்க சில இயற்கை வழிகளை தெரிந்து கொள்வோமா??

தியானம்: 

தினமும் தியானம் செய்வது உடலுக்கு மனதிற்கு நல்லது.  காலை நேரத்தில் யோகா அல்லது பிராணாயாமம் போன்றவை செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், தூக்கமின்மை பிரச்னையும் ஏற்படாது. 


லேவண்டர் ஆயில்: 

லேவண்டர் ஆயில் தூக்கத்தை மேம்படுத்தும்.  மேலும் உங்கள் மனதை ஆற்றுப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை பெற செய்கிறது.  தலையணையில் லேவண்டர் ஸ்ப்ரே பயன்படுத்தினால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம்.  அல்லது இதனை கொண்டு மசாஜ் செய்யலாம்.   

 

3eo4bu6o

 

 

மசாஜ்:

மசாஜ் செய்வதால் உடலும் மனமும் தளர்வடையும்.  சோர்வு நீங்கி நிம்மதியாக இருக்க முடியும்.  உடலுக்கு ஏற்ற எண்ணெய் அல்லது க்ரீம் பயன்படுத்தி மசாஜ் செய்து கொள்ளலாம்.   

 

மக்னீஷியம்:

மக்னீஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.  ஆனால் அதிகளவு மக்னீஷியத்தை சேர்த்து கொள்வதும் தவறு.  கீரைகள், வாழைப்பழம், கொண்டைக்கடலை, ப்ரோக்கலி, நட்ஸ் மற்றும் கடல் உணவுகளில் மக்னீஷியம் நிறைந்திருக்கிறது. 

 

உடற்பயிற்சி:

உடல்பயிற்சி செய்வதால் தூக்கமின்மை பிரச்னை உண்டாகாது.  தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதுடன் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.  சோர்வை நீக்கி புத்துணர்வுடன் இருக்க செய்யும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------