முகப்பு »  நலவாழ்வு »  இரத்த அழுத்தத்தை குறைக்கும் 10 உணவுகள்!!

இரத்த அழுத்தத்தை குறைக்கும் 10 உணவுகள்!!

ஆலிவ் எண்ணெய் கொண்டு சமையல் செய்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  இதில் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இரத்த அழுத்தம் சீராகிறது.  

இரத்த அழுத்தத்தை குறைக்கும் 10 உணவுகள்!!

சிறப்பம்சங்கள்

  1. சோடியத்தின் அளவை குறைத்தால் உயர் இரத்த அழுத்தம் சீராகும்.
  2. பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குணமாகும்.
  3. உயர் இரத்த அழுத்தத்தால் இருதய நோய்கள் ஏற்படும்.

உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போது பெரும்பாலானோரை பாதிக்கும் ஒரு வாழ்வியல் நோயாகும்.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.  சில உணவுகள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.  அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

கீரைகள்:

உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்க கீரைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.  கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  கீரைகள், முட்டைக்கோஸ், லீட்யூஸ் போன்றவற்றை சாப்பிடுவதால் உடலில் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.  


bvbn84i8

வாழைப்பழம்: 

இந்தியாவில் அதிகபடியாக சாப்பிடக்கூடிய பழம் வாழைப்பழம்.  இதில் பொட்டாஷியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தம் சீராக இருக்க பயன்படுகிறது.  

ஓட்ஸ்: 

ஓட்ஸில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.  காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

கிவி: 

உடலுக்கு தேவையான ஆரோக்கியங்கள் நிறைந்திருக்கும் இந்த கிவி பழத்தை சாப்பிடுவதால் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியம் சீராக இருக்கும்.  

பூண்டு: 

பூண்டை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால் கொலஸ்ட்ரால், செரிமான பிரச்சனை மற்றும் வீக்கம் போன்றவை குணமாகும்.  காலை நேரத்தில் பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் சீராகும். 

தர்பூசணி: 

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், பொட்டாஷியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். 

யோகர்ட்: 

கொழுப்பு சத்து குறைந்த யோகர்டில் கால்சியம் அதிகம் உள்ளது.  தினமும் யோகர்ட் சாப்பிடுவதால் புத்துணர்வோடு இருக்க முடியும்.  

பெர்ரீஸ்: 

 ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சாலட், ஷேக், ஸ்மூத்தி போன்றவற்றில் இந்த பெர்ரீஸ் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆண்டிஆக்ஸிடண்ட் கிடைக்கிறது.  
 

upuk59v

பிட்ரூட்: 

பிட்ரூட்டை சாப்பிடுவதால் செரிமானம், மூளை செயல்பாடுகள் ஆகியவை சிறப்பாக இருக்கும்.  இதில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  மேலும் கலோரிகள் குறைவான இந்த பீட்ரூட்டை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைகிறது.  

ஆலிவ் எண்ணெய்: 

ஆலிவ் எண்ணெய் கொண்டு சமையல் செய்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  இதில் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இரத்த அழுத்தம் சீராகிறது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------