முகப்பு »  நலவாழ்வு »  இ - சிகரெட்டுக்கு அடிமையாக்குவது அதன் நறுமணமே - ஆராய்ச்சி முடிவு

இ - சிகரெட்டுக்கு அடிமையாக்குவது அதன் நறுமணமே - ஆராய்ச்சி முடிவு

நறுமணம் தான், திரும்பத் திரும்ப இ-சிகரெட்களை புகைக்க தூண்டுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது

இ - சிகரெட்டுக்கு அடிமையாக்குவது அதன் நறுமணமே - ஆராய்ச்சி முடிவு

புகைப்பழக்கத்துக்கு மாற்றாக பயன்படுத்துப்படும் இ-சிகரெட்களில் இருந்து வரும் புகையில் ஒரு வகையான நறுமணம் கிடைக்கும். இந்த நறுமணம் தான், திரும்பத் திரும்ப இ-சிகரெட்களை புகைக்க தூண்டுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகையில் இருக்கும் புகையிலை இல்லாத பொருட்களின் நறுமணம், சாதாரண சிகரெட்டில் இருந்து காலப்போக்கில் முழுவதுமாக இ-சிகரெட் புகைப்பழக்கத்துக்கு மாற்றுவதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

“பழங்களின் நறுமணம் கொண்ட இ - புகைகளில் தான் பெரும்பாலும் விரும்பப்படுகிறது” என்கிறார் ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறிஸ்டோஃபர் ரஸ்ல் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு இ - புகைகளை பயன்படுத்தும் பழக்கம் கொண்ட 20,836 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் 16,000 பேர் முழுமையாக எல்க்ட்ரானிக் புகைக்கும் பழக்கத்துக்கு முழுவதுமாக மாறிவிட்டது தெரியவந்துள்ளது. 5000 பேர் சாதரணமாக புகைக்கும் பழக்கமும், எல்க்ட்ரானிக் முறையில் புகைக்கும் பழக்கமும் கொண்டவர்களாக இருந்தனர்.

இந்த ஆய்வில், அதிகம் விரும்பப்படும் எல்க்ட்ரானிக் புகைக்கும் ஃபிளேவர்கள், பழங்களுடையதாக இருக்கிறது. பழங்களின் ஃபிளேவர்களில் எல்க்ட்ரானிக் திரவ புகை முறையை இதில் 82.9% பேர் பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக 68.5% டெசர்ட் வகைகளின் ஃபிளேவர்களை விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் பட்டியலில், புகையிலை ஃபிளேவருக்கு ஆறாவது இடமே கிடைத்துள்ளது.

முதல் முறையாக இ - புகைப்பிடப்பவர்கள் எந்த ஃபிளேவரை விரும்புகின்றனர் என்ற ஆராய்ச்சியும் நடத்தப்பட்டது. அதில் 2011-ம் ஆண்டுக்கு முன் 17.8% பேர் விரும்பியுள்ளனர். 2015- 2016 காலகட்டத்தில் இது 33% ஆக உயர்ந்தது. அதே நேரம் புகையிலை ஃபிளேவர் விரும்புவது 46 சதவிகிதத்தில் இருந்து 24% ஆக குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------