முகப்பு »  நலவாழ்வு »  டெல்லி அரசு அறிமுகப்படுத்திய புதிய பைக் ஆம்புலன்ஸ்

டெல்லி அரசு அறிமுகப்படுத்திய புதிய பைக் ஆம்புலன்ஸ்

டெல்லியில்  நெருக்கமான பகுதிகளான ஜெ.ஜெ. கிழக்கு டெல்லி ( கிழக்கு, வடகிழக்கு மற்றும் ஷாஹ்தாரா ) ஆகிய இடங்களுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. 

டெல்லி அரசு அறிமுகப்படுத்திய புதிய பைக் ஆம்புலன்ஸ்

இந்த பைக்கில் ஆக்ஸிஜன் சிலிண்டர், முதலுதவி பொருட்கள் , ஜிபிஎஸ், தொடர்பு சாதனங்கள் ஆகியவை உள்ளன. 

சிறப்பம்சங்கள்

  1. போக்குவரத்து நெரிசல் நிறைந்த குறுகிய பகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ளது.
  2. ஆம்புலன்ஸ் வேன்களால் செல்ல முடியாத பகுதிக்கும் பைக்கினால் செல்ல முடியும்
  3. 40 லட்சம் ஒதுக்கப்பட்ட நிதியில் 23 லட்சத்திலே இந்த பணி முடிவடைந்துள்ளது.

டெல்லியில் புதியதாக பைக் ஆம்புலன்ஸ் சேவைகள் தொடங்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த குறுகிய  பகுதிகளில் அவசர கால உதவியை உறுதி செய்யும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த பைக்கில் ஆக்ஸிஜன் சிலிண்டர், முதலுதவி பொருட்கள் , ஜிபிஎஸ், தொடர்பு சாதனங்கள் ஆகியவை உள்ளன. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார அமைச்சர் சட்யேந்தர் ஜெயின், 16 பைக்குகளை டெல்லி செயலகத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கினார். டெல்லியில்  நெருக்கமான பகுதிகளான ஜெ.ஜெ. கிழக்கு டெல்லி ( கிழக்கு, வடகிழக்கு மற்றும் ஷாஹ்தாரா ) ஆகிய இடங்களுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. 


டெல்லியில் “மக்களின் நலனுக்காக பெரிய செயலை செய்துள்ளோம். மருத்துவத்திற்கான ஆம்புலன்ஸ் சேவையாக பெரிய வேன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதன் முறையாக பைக் ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்தியுள்ளோம்” ரூ. 40 லட்சம் செலவிலான இந்த திட்டம் கடந்த ஆண்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 23 லட்சத்திற்கே இந்த திட்டம் முடிவடைந்துள்ளது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com