முகப்பு »  நலவாழ்வு »  உடல்பருமனை குறைக்க க்ரீன் டீ குடிக்கலாம்!!

உடல்பருமனை குறைக்க க்ரீன் டீ குடிக்கலாம்!!

 சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு கிரீன் டீ பயன்படுகிறது.  கிரீன் டீ குடிப்பதால் கல்லீரல் மற்றும் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். 

உடல்பருமனை குறைக்க க்ரீன் டீ குடிக்கலாம்!!

கிரீன் டீ குடிப்பதால் உடல் பருமன் மற்றும் குடல் வீக்கம் குறைகிறதென ஒரு ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  தொடர்ச்சியாக க்ரீன் டீ குடிப்பதால் உடலில் கொழுப்பு குறைந்து 20 சதவிகிதம் வரை உடல் எடையும் குறைகிறது.  மேலும் இன்சுலின் அளவு சீராக இருக்கிறது.  இந்த பரிசோதனையை எலிகளிடத்தில் நடத்தப்பட்டது.  அதில் க்ரீன் டீ எக்ஸ்ட்ராக்டை சாப்பிட்டு வந்த எலிகளின் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது.  

அதேபோல அந்த எலிகளின் குடலில் ஆரோக்கியத்தை அதிகபடுத்தக்கூடிய மைக்ரோப்ஸ் இருந்ததாகவும் தகவல் வெளியாகியது.  க்ரீன் டீ குடிப்பதால் குடல் பகுதியில் நல்ல பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கிறது.  தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் இந்த பரிசோதனையை நடத்தியதில் உடலில் அதிகபடியான கொழுப்புகள் குறைவதை காண முடிந்தது.  

அதனால் தினமும் க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.  இதனால் உடல் எடை குறையும்.  நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் இன்சுலின் அளவு சீராக இருக்கும்.  சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு கிரீன் டீ பயன்படுகிறது.  கிரீன் டீ குடிப்பதால் கல்லீரல் மற்றும் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------