முகப்பு »  நலவாழ்வு »  தீபாவளி எதிரொலி: டெல்லியில் காற்று மாசு அபாயகட்டத்தை அடைந்தது

தீபாவளி எதிரொலி: டெல்லியில் காற்று மாசு அபாயகட்டத்தை அடைந்தது

டெல்லியில் காற்றின் தரக் குறியீட்டு எண் (AQI) காலை 8 மணி முதல் 458 ஆக பதிவு செய்யப்பட்டது

தீபாவளி எதிரொலி: டெல்லியில் காற்று மாசு அபாயகட்டத்தை அடைந்தது

டெல்லியில் காற்றின் தரக் குறியீட்டு எண் (AQI) காலை 8 மணி முதல் 458 ஆக பதிவு செய்யப்பட்டது.

தலைநகரம் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் 'அபாயகரமான' க‌ட்டத்தை அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு நாள் கழித்து தலைநகரம் டெல்லி முழுவதும் கரும்புகை போர்வை போன்று கவிழ்ந்திருந்தது. இதனால் எதிர் வரும் வாகனங்களை கூட பார்க்க முடியாத அளவிற்கு கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

டெல்லியில் காற்றின் தரக் குறியீட்டு எண் (AQI) காலை 8 மணி முதல் 458 ஆக பதிவு செய்யப்பட்டது. இது 'அபாயகரமான' நிலையாகும். இது காற்று தரநிலை மற்றும் வானிலை அடிப்படையிலான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி (SAFAR) தெரிவித்தது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக‌ ஆனந்த் விஹார் (AQI: 999), லோதி ரோடு (AQI: 500), சனகியபுரி (AQI 459) மற்றும் மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் (AQI: 999) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளது. மேலும், அக்சர்தம் கோயில் மற்றும் ரைஸானா ஹில் பகுதிகள் காற்று மாசினால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

காற்றின் தரக்குறியீட்டு எண் அடிப்படையில் 0-50 க்கு இடையில் நல்லதாகக் கருதப்படுகிறது, 51-100 திருப்திகரமாக உள்ளது, 101-200 மிதமான, 201-300 பாதிக்கப்பட்ட நிலையெனவும், 301-400 கூடுதலாக பாதிக்கப்பட்ட நிலையெனவும் 401-500 கடுமையான / அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறது.


காற்று மாசினால் காலையில் வேலைக்கு செல்ல கடினமாக இருப்பதாக பலரும் கூறியுள்ளனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------