முகப்பு »  நலவாழ்வு »  நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் நல்ல பாக்டீரியா இருக்கிறதா??

நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் நல்ல பாக்டீரியா இருக்கிறதா??

ஊறுகாய் என்றாலே பதப்படுத்தப்பட்ட உணவு தான்.  இயற்கை பொருட்கள் மற்றும் வினிகர் சேர்த்திருப்பதால் உடலுக்கு நன்மையே செய்யும்.  

நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் நல்ல பாக்டீரியா இருக்கிறதா??

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளால் நமக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.  அது அந்த உணவில் மனித குடலுக்கு ஏற்ற பாக்டீரியாக்கள் இல்லாததன் காரணம் தான்.  பெரும்பாலான அமெரிக்கர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது.  அதாவது சுமார் 32 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  அதில் 8 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த உணவு ஒவ்வாமை காரணமாக பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் ஏற்படாமலும், பால் சுரப்பு குறைந்தும் காணப்படுகிறது.  இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் குடலுக்கு தேவையான பாக்டீரியா இல்லாததுதான்.  இந்த நல்ல பாக்டீரியாக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.  

8nn05muo

 இந்த பரிசோதனையை குழந்தைகளிடமிருந்து ஆராய்ச்சியாளர்கள் துவங்கினார்கள்.  பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மலத்தை பரிசோதனை செய்ததில் ஒவ்வொரு குழந்தையிடமும் வெவ்வேறு உணவு ஒவ்வாமையை கண்டறிந்தனர்.  நாம் சாப்பிடக்கூடிய உணவில் தரம் மற்றும் அளவை பொருத்துதான் நம் உடல் ஆரோக்கியம் அமையும்.  உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியா இருக்கும் உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.  


8sgrtel

 

யோகர்ட்: 
நல்ல பாக்டீரியா நிறைந்த உணவுகளுள் யோகர்ட்டும் ஒன்று.  இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதால் தினமும் யோகர்ட் சாப்பிடலாம்.  

கெஃபிர்: 
இந்த ப்ரோபையோடிக் பானம் கெஃபிர் தானியங்கள் மற்றும் பால் சேர்த்து செய்யப்படுபவை.  இதில் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

கொம்புசா: 
பதப்படுத்தப்பட்ட ப்ளாக் மற்றும் க்ரீன் டீயில் தயாரிக்கப்படும் இந்த பானத்தில் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் இருக்கிறது.  

ஊறுகாய்: 
ஊறுகாய் என்றாலே பதப்படுத்தப்பட்ட உணவு தான்.  இயற்கை பொருட்கள் மற்றும் வினிகர் சேர்த்திருப்பதால் உடலுக்கு நன்மையே செய்யும்.  

மோர்: 
மோரில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது.  சிறந்த ப்ரோபையோடிக் பானம் என்பதால் அடிக்கடி இதனை குடிக்கலாம். 

சாஃப்ட் சீஸ்: 
மொசரெல்லா, செடர் சீஸ், காட்டேஜ் சீஸ் ஆகியவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.  

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com