முகப்பு »  நலவாழ்வு »  குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய 4 உணவுகள்!!

குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய 4 உணவுகள்!!

ப்ரோபையோடிக் உணவுகளில் செரிமானத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய 4 உணவுகள்!!

சிறப்பம்சங்கள்

  1. குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  2. குடல் ஆரோக்கியமாக இருந்தால் பல நோய்கள் தடுக்கப்படுகிறது.
  3. ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் மட்டுமே உடலில் மற்ற உறுப்புகளும் சீராக வேலை செய்ய முடியும்.  குடலில் நல்ல மற்றும் கேடுவிளைக்கக்கூடிய புழுக்கள் ஏராளமாக இருக்கும்.  குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை செய்யக்கூடியது.  செரிமான கோளாறுகள் சில சமயங்களில் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.  குடல் அரோக்கியத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.  

ஆரோக்கியமான உணவு: 
ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சம அளவில் எடுத்து கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  பூண்டு, அன்னாசிப்பழம், ஆப்பிள் சிடர் வினிகர், ப்ரோக்கோலி, இஞ்சி போன்ற உணவுகள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடியவை.  இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.  

ப்ரோபையோடிக்ஸ்: 
ப்ரோபையோடிக் உணவுகளில் செரிமானத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது.  நாள் ஒன்றில் எந்த நேரம் வேண்டுமானாலும் யோகர்ட் சாப்பிடலாம்.  ஃப்ளேவர்டு யோகர்ட்டை தவிர்ப்பதும் நல்லது.  அதில் பெர்ரி மற்றும் மற்ற பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்.  

பராமரிப்பு: 
குடலுக்கு உகந்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.  எந்தெந்த உணவுகள் சாப்பிடும்போது செரிமான கோளாறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்னை ஏற்படுகிறதென்பதை கவனித்து அவற்றை தவிர்ப்பது நல்லது.  குறிப்பாக எண்ணெயில் பொரித்த உணவு மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பதால் குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  

6u5k2bg8

 தவிர்க்க வேண்டியவை: 
குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள், கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.  பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.   

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com