முகப்பு »  கல்லீரல் »  கல்லீரலை எப்படி பாதுகாப்பாய் வைத்து கொள்வது??

கல்லீரலை எப்படி பாதுகாப்பாய் வைத்து கொள்வது??

உடல் எடை அதிகரிக்கக்கூடிய மருந்துகளை சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.  உடல் எடை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

கல்லீரலை எப்படி பாதுகாப்பாய் வைத்து கொள்வது??

சிறப்பம்சங்கள்

  1. மனித உடலில் முக்கியமான உறுப்பு கல்லீரல்.
  2. பித்தநீரை சுரக்க செய்கிறது.
  3. உடல் எடை அதிகரிக்க செய்யும் மாத்திரைகளை சாப்பிடக்கூடாது.

உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு.  பித்தநீர் சுரப்பு, இரத்த சுத்திகரிப்பு, உடலில் ஊட்டச்சத்துக்களை தக்க வைப்பது போன்ற செயல்களை செய்யக்கூடிய கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மற்ற உறுப்புகளும் சீராக செயல்படும்.  கல்லீரலை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.  

1. உடல் எடை: 
எல்லா நோய்களுக்கும் தொடக்க புள்ளி உடல் பருமன்.  உடல் பருமன் அதிகரித்திருந்தால் கல்லீரல் பிரச்னைகள் வரலாம்.  தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மேலும் இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.


2n9cvt9o

2. மது: 
மது அருந்துவதால் கல்லீரல் பெருமளவில் பாதிக்கப்படும்.  மதுவை முழுவதுமாக நிறுத்த முடியாவிட்டால், குறைவாக எடுத்து கொள்ளலாம்.  ஆனால் எப்படியானாலும் மது அருந்துவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கும்.  

3. உடற்பயிற்சி: 
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடல் உபாதைகள் தடுக்கப்படுகிறது.  மேலும் கல்லீரலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைக்கப்படுகிறது.  தினமும் நடைப்பயிற்சி அல்லது வேறு பயிற்சிகள் செய்யலாம்.  

4. உணவு: 
உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.  காபி, தேநீர், கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆலிவ் எண்ணெய், நட்ஸ், காய்கறிகள், திராட்சை மற்றும் பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம்.  இவை கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.  

5. மருந்துகள்: 
நாம் சாப்பிடக்கூடிய மருந்துகள் கூட கல்லீரலை பாதிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும்.  தொடர்ச்சியாக மருந்துகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்னை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.  
 

ab4bqddo

6. சப்ளிமெண்ட்: 
உடல் எடை அதிகரிக்கக்கூடிய மருந்துகளை சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.  உடல் எடை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.  கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய மருந்துகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com