முகப்பு »  நீரிழிவு »  நீரிழிவு நோய் தாக்கத்தின் அறிகுறியை எப்படி அறியலாம்!!

நீரிழிவு நோய் தாக்கத்தின் அறிகுறியை எப்படி அறியலாம்!!

இரத்த சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருந்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படாது. 

நீரிழிவு நோய் தாக்கத்தின் அறிகுறியை எப்படி அறியலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. நீரிழிவு நோயால் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.
  2. கண்களின் முன்புறம் கரும்புள்ளிகள் வருவதே அறிகுறி.
  3. கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

டைப் 2 நீரிழிவு நோய் என்பது நம்மில் பலருக்கு ஏற்படக்கூடிய பொதுவான உடல் உபாதையாக மாறிவிட்டது.  இந்த நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து தீவிரமான உடல் உபாதைகளை உருவாக்கும்.  நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்த பிறகு அதனை கட்டுக்குள் வைப்பதென்பது சற்றே சிரமமான விஷயம்.  அதனை அதன் அறிகுறிகளை வைத்து முன்னதாகவே கண்டறிந்துவிட்டால் எளிதில் கட்டுக்குள் வைக்கலாம்.   

நீரிழிவு நோயின் அறிகுறிகள்: 

வாயில் வறட்சி, அதிகபடியான பசி, அதீத தாகம், தலைவலி, உடல் எடை குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், நோய் தொற்று, ஆரோக்கியமற்ற ஈறுகள், மறதி போன்றவை டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.  


bijpqi48

கண்களில் ஏற்படும் அறிகுறிகள்:

நீரிழிவு நோய் ஏற்பட்டால் உடலில் உள்ள சிறுசிறு இரத்த நாளங்கள் எல்லாம் பாதிப்புக்குள்ளாகும்.  குறிப்பாக கண்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.  டயபடிக் ரெட்டினோ என்று சொல்லப்படும் இந்த கண் நோய் உண்டாகும்.  இதன் விளைவாக கண் பார்வை பரிபோகும் அபாயமும் இருக்கிறது.  உடலில் இரத்த சர்க்கரை அதிகரித்தால் கண்களில் ரெட்டினா பகுதி பாதிக்கப்படும்.  ஆரம்பத்தில் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.  கண்களின் முன் பகுதியில் சிறு சிறு கரும்புள்ளிகள் வரக்கூடும் என்பதால் இதனை வைத்து கண்டறியலாம்.  

பாதுகாப்பு முறை: 

இரத்த சர்க்கரை,உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருந்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படாது.  நார்ச்சத்து, கொழுப்பு நிறைந்த மீன்கள், வைட்டமின் டி, ஆண்டிஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, உடலில் கலோரிகளும் சேராது. ஆரோக்கியமும் அதிகரித்திடும்.  இதனால் டயபடிக் ரெட்டினோபதி பிரச்னை ஏற்படாது.  முழுமையான பார்வை குறைபாட்டை தவிர்க்க, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.  புகைப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.  கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.  கண்பார்வையில் உண்டாகும் மாற்றங்களை தொடர்ச்சியாக கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------