முகப்பு »  Women's Health »  நீங்கள் இரவு நேர வேலை பார்க்கும் பெண்ணா…? இதை முதல்ல படிங்க…

நீங்கள் இரவு நேர வேலை பார்க்கும் பெண்ணா…? இதை முதல்ல படிங்க…

இரவில் தாமதமாக உழைத்து மன அழுத்தம் வருவதால் பெண்ணின் உடல் கருத்தரிப்பு முட்டை உற்பத்தியை நிறுத்தி விடுகிறது.

நீங்கள் இரவு நேர வேலை பார்க்கும் பெண்ணா…? இதை முதல்ல படிங்க…

பணியிடங்களில் உள்ள மன அழுத்தம் அல்லது கடினமான வேலை முறைகள் மாதவிடாய் முடிவைக் காலத்தைவிரைந்து கொண்டு வருகிறது.

பெண்கள் இரவு நேர ஷிப்டுகளில் வேலை செய்யும் போது மாதவிடாய் காலம் முன்கூட்டியே முடிந்து விடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. மேலும், இருதய நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் நினைவக பிரச்னைகள் ஆகியவற்றின் சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது. இந்த ஆய்வு, பெண்கள் 20 மாதங்கள் தொடர்ந்து இரவு நேர ஷிப்டுகளில் வேலை பார்த்தவர்களை வைத்து மாற்றங்களை கண்காணித்து முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டு வருடத்தில் 9 சதவீதம் முன்கூட்டிய மாதவிடாய் கால ஆபத்தை அதிகரித்துள்ளது. இரவு பகல் என்று மாற்றி மாற்றி வேலை பார்த்தால் இந்த ஆபத்து 73 சதவிகிதம் அதிகரிக்கும்.  45வயதிற்கு முன்னர் மாதவிடாய் நின்று விட்ட பெண்களுக்கு மாற்றப்படும் ஷிப்ட் முறையிலான வேலையில்  இருந்தவர்கள் எனத் தெரிகிறது. அல்லது மன அழுத்தம் அல்லது சோர்வு ஆகியவற்றின் இடையூறு காரணமாக இருக்கலாம். இது  குறித்து ஆராய்ச்சி மிகவும் அவசியம் என்று கனடாவில் உள்ள டல்ஹெளசி பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் ஸ்டாக் கூறியுள்ளார்.

மன அழுத்தம் தரும் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் போன்றவை பாலியல் ஹார்மோன்களை சீர்குலைக்கும் என்று நம்பப்படுகிறது. இரவில் தாமதமாக உழைத்து மன அழுத்தம் வருவதால் பெண்ணின் உடல் கருத்தரிப்பு முட்டை உற்பத்தியை நிறுத்தி விடுகிறது. மனித இனப்பெருக்கம் குறித்து பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வு இதைக் கூறுகிறது. பணியிடங்களில் உள்ள மன அழுத்தம் அல்லது கடினமான வேலை முறைகள் மாதவிடாய் முடிவைக் காலத்தைவிரைந்து கொண்டு வருகிறது. 22 ஆண்டுகளுக்கு இரவு நேரம் பணிபுரிந்த  80,000 செவிலியர்கள் மற்றும் இரவு பகல் என மாற்றி மாற்றி பணிபுரிந்தவர்களையும் வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ​(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com