முகப்பு »  Women's Health »  பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தமா? தவறாமல் படியுங்கள்!

பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தமா? தவறாமல் படியுங்கள்!

கர்ப்பமும் பிரசவமும் ஓர் அற்புதமான உணர்வைத் தரும். அதோடு பல பெண்களுக்கு மன அழுத்தத்தையும் தரும்

பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தமா? தவறாமல் படியுங்கள்!

கர்ப்பமும் பிரசவமும் ஓர் அற்புதமான உணர்வைத் தரும். அதோடு பல பெண்களுக்கு மன அழுத்தத்தையும் தரும். காலம் தாழ்த்திய கர்ப்பத்தில் அதிகளவு மன அழுத்தம் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினம் கொஞ்ச நேரம் வெயிலில் நின்று விட்டமின் டி-யை பெறுவதன் மூலம் இதனை தவிர்க்கலாம் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

குறைந்தளவு இயற்கை வெளிச்சம் நம்மீது படுவதும் மனசோர்வுக்கு காரணம் என்றாலும், இயற்கையான ஒளி அல்லது பருவ நிலை மாறுபாடு பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தத்துக்கு காரணமா என்பதிலேயே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதற்காக நடத்தப் பட்ட 293 முதல்முறை கர்ப்பமடைந்த பெண்கள் கலந்துக் கொண்டார்கள். ஒட்டுமொத்த, பங்கேற்பாளர்களில் 30 சதவீதம் பெண்களுக்கு மன அழுத்தம் இருந்தது. 26 சதவீதம் பெண்களுக்கு மன அழுத்தம் பாதிப்பில்லாமல் இருந்தது. இந்த பெண்களின் இறுதி மூன்று மாதங்கள் நீண்ட பகல்நேர காலங்களுடன் ஒத்துப்போயின.


அதனால் கர்ப்பகால மன அழுத்தத்துடன் இருக்கும் பெண்கள் அவர்களின் இறுதி மூன்று மாதங்களில், அதிக நேரம் சூரிய ஒளியில் படுவது, லைட் தெரபி ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------