முகப்பு »  கர்ப்பம் »  கர்ப்ப காலத்தில் சொல்லப்படும் 10 மூடநம்பிக்கைகள்

கர்ப்ப காலத்தில் சொல்லப்படும் 10 மூடநம்பிக்கைகள்

பொதுச் சமூகத்தில் நிலவி வரும் கர்ப்பகால குறித்த நம்பிக்கைகள் சில அறிவியல் அடிப்படையே இல்லாதவையாகத்தான் இருக்கின்றன

கர்ப்ப காலத்தில் சொல்லப்படும் 10 மூடநம்பிக்கைகள்

பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பகாலம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்த சமயத்தில் தான் கூடுதல் கவனிப்பும் அக்கறையும் அன்பானவர்களால் வழங்கப்பட வேண்டும். இந்த கர்ப்பகாலத்தைப் பற்றி அறிவியல் ஆதாரமற்ற பல நம்பிக்கைகள் சமூகத்தில் உண்டு. ஆரோக்கியமான முறையில் குழந்தையைப் பெற மருத்துவரின் ஆலோசனை அவசியம். பொதுச் சமூகத்தில் நிலவி வரும் கர்ப்பகால குறித்த  நம்பிக்கைகள் சில அறிவியல் அடிப்படையே இல்லாதவையாகத்தான் இருக்கின்றன. அப்படியான மூடநம்பிக்கைகள் என்னென்ன என்பதை  தொகுத்து தருகிறது DOCTOR NDTV  

இரண்டு பேருக்கு சாப்பிடனும்

ஒரு பெண் கர்ப்பத்திற்கு முந்தைய காலத்தில் 300 கூடுதல் கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கன் காங்கிரஸ் ஆஃப் ஆப்ஸ்ட் ரிக்கன்ஸ் அண்டு கைனகாலஜ்ட் (American Congress of Obstetricians and Gynecologists (ACOG)) தெரிவிக்கிறது.  கர்ப்ப காலத்தில் பெண் தன்னுடைய எடையிலிருந்து 11 முதல் 15 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்பானதே. இதற்கு மேல் எடை கூடினால் சிசேரியனுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலே தாய்க்கும் சேய்க்கும் போதுமானது. ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்ளலாம். 


2. பப்பாளி  சாப்பிட்டால் கர்ப்பம் கலைந்து விடும்

கர்ப்பம் கலைந்து விடுவதற்கான சாத்தியங்கள் பப்பாளி பழத்தில் உள்ளதென்று நம்பிக்கை இந்தியக் கலாச்சாரத்தில் வேர் ஊன்றியுள்ளது. உண்மையில், பழுக்காத அல்லது பாதி பழுத்த பப்பாளி மட்டுமே சாப்பிடக்கூடாது. நன்றாக பழுத்த பப்பாளியை நிச்சயமாக சாப்பிடலாம். இதனால் எந்தவகையிலும் கர்ப்பம் கலையாது. 

3. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை கூடுதல் நிறத்துடன் பிறக்கும்

 குழந்தையின் நிறம் என்பது முழுக்க முழுக்க மரபணுக்களில் தீர்மானம் ஆகக்கூடிய ஒன்று. குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்கும் என்பது  முற்றிலும் மூடநம்பிக்கையே. 

4. அதிகமாக நெய் சாப்பிடுவது பிரசவத்திற்கு நல்லது

 நெய் ஒரு கொழுப்பு சத்து என்பதால் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து அதனால் வேறு சில உடல் உபாதைகள் ஏற்படும். பலர் நெய் சாப்பிடுவதால் பெண்ணுறுப்பிற்கு மிகவும் நல்லதென்றும் இதனால் பிரசவ எளிதில் ஆகும் என்று கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று. 

5. கிரகண நாளில் கர்ப்பிணி பெண் எந்தவொரு வேலையும் செய்யக் கூடாது

கர்ப்பிணி பெண்கள் கிரகண நாளில்  எந்தவொரு வேலையிலும் ஈடுபடக் கூடாது. அதையும் மீறி செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும் என்று நம்பப்படுகிறது. இது முற்றிலும் அடிப்படை ஏதுமற்ற மூடநம்பிக்கைதான்.

 6. காபி குடிக்கக் கூடாது

 பெண்கள் அதிகளவு காபி குடிப்பதால் கருச்சிதைவு ஏற்படலாம் என்று எச்சரிக்கைப் படுவார்கள். உண்மையில்  ஒருநாளைக்கு 200மி.லி வரை காபியை குடிக்கலாம் இதனால எந்த வகையில் கருவில் குழந்தைகக்கு பாதிப்பு ஏதுமில்லை. 

7. தாம்பத்ய உறவு கூடாது

 கர்ப்ப காலத்தில் உறவு வைத்துக் கொள்வதால் கரு கலைவதற்கு வாய்ப்புகள் இல்லை. குழந்தை உறுதியான யூட்டிரின் தசைகளால் சூழ்ந்து இருப்பதால் எந்த வகையிலும் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை. மாறாக நோய்த்தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்கவே மருத்துவர் எச்சரிக்கை செய்வார்கள். 

8. பெண்கள் இடது பக்கம் ஒருசாய்த்து மட்டுமே படுக்கவேண்டும்

 பெண்கள் முதுகு தரையில்  படும்விதமாக படுக்கக் கூடாது. அப்படி படுத்தால் குழந்தைக்கு ஆக்ஸிஜன் சரியாக போகாமல் மூச்சு முட்டும் என்று சொல்வது வழக்கும்.  பெண்கள் இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ ஒரு சாய்த்து மட்டுமே படுக்க வேண்டுமென்று சொல்வதைப் பார்க்கலாம். இது முற்றிலும் தவறான ஒன்று . எப்படி படுத்தால் சவுகரியமாக இருக்கிறதோ அப்படியே படுப்பதுதான் சிறந்தது 

9. உடற்பயிற்சி செய்யக்கூடாது

முறையான உடற்பயிற்சி உடலுக்கு நன்மையை தரக்கூடியது. அது எந்த வகையிலும் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை. 

10. பயணம் செய்யக்கூடாது

கர்ப்பகாலத்தில் பயணம் செய்வது ஆபத்தானது என்று சொல்லவதைப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மருத்துவர் உங்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பயண்த்தை தவிர்க்கச் சொன்னால் மட்டும் பயணத்தை தவிர்க்கலாம்.  

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------