முகப்பு »  ஊட்டசத்து »  அப்பாவாகும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்போ நட்ஸ் சாப்பிடுங்க

அப்பாவாகும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்போ நட்ஸ் சாப்பிடுங்க

அப்பாவாகும் திட்டத்தில் இருக்கும் ஆண்கள் தினமும் 60 கிராம் நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

அப்பாவாகும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்போ நட்ஸ் சாப்பிடுங்க

சிறப்பம்சங்கள்

  1. 60 கிராம் நட்ஸ் சேர்த்து கொண்டால், இனப்பெருக்க சக்தி அதிகரிக்கும்
  2. அதோடு விந்தணுக்களின் எண்ணிக்கை 20% அதிகமாகும்
  3. தவிர, விந்தணுவிலுள்ள டி.என்.ஏ சிதைவதைக் குறைக்கும்

அப்பாவாகும் திட்டத்தில் இருக்கும் ஆண்கள் தினமும் 60 கிராம் நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் விந்தணுவின் தரம், அளவு, இயக்கம் மேம்படுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால், 20% விந்தணுவின் எண்ணிகையும், 6% இயக்கமும், 5% ஆயுளும் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புகைப்பிடித்தல், சுற்றுச்சூழல் மாசு, மேற்கத்திய உணவு முறை பழக்கம் ஆகியவை விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என ஸ்பெயின் ரொவிரோ பல்கலைக்கழக ஆய்வின் தகவல்கள் கூறுகின்றன.

நட்ஸில் ஓமேகா-3 கொழுப்புகள், ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், விட்டமின் சி, இ மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் உள்ளன.

மேற்கூறிய இந்த ஆய்வில், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட 119 ஆண்கள் கலந்து கொண்டனர். 14 நாட்கள் அவர்களின் தினசரி உணவுகளுடன் 60 கிராம் பாதாம் கொடுக்கப்பட்டன. இதன் மூலம் நட்ஸ் ஆண்களின் இனப்பெருக்க சக்தியை அதிகரிப்பது நிரூபனம் ஆகியிருக்கிறது.(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------