முகப்பு »  செய்தி »  தலைமுறைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் - அதிர்ச்சி ஆய்வு

தலைமுறைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் - அதிர்ச்சி ஆய்வு

ஆரம்ப கால பீபிஏ தாக்கம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோய் வருவதற்கான ஆபத்துக்களை அதிகரிப்பதற்கான சாத்திம் இருக்கின்றன

தலைமுறைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் - அதிர்ச்சி ஆய்வு

BPA might increase an infant's risk for autism spectrum disorder

சிறப்பம்சங்கள்

  1. பைஸ்ஃபினால் ஏ (பீபிஏ) எனும் ரசாயனம் தலைமுறை தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும்
  2. பீபிஏ தாக்கம் குழந்தைகளிடம் ஆட்டிசம் நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கலாம்
  3. மூதாதையர்ள் பீபிஏ வினால் பாதிக்கப்பட்டால் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்

ஒரு குறிப்பிட்ட பிளாஸ்டிக் இரசாயணத்தை நீங்கள் அதிகம் நுகர நேர்ந்தால் அது உங்கள் பேரப்பிள்ளைகளின் தொடர்பியல் திறன்களை பாதிக்கலாம் என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆரம்ப ரசாயன பயன்பாட்டிற்கும், ஆட்டிசத்திற்கான ஆபத்துக்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பைஸ்ஃபினால் ஏ (பீபிஏ) எனும் நாளங்களை பாதிக்கும் இரசாயனம் நுகர்வோர் பொருட்களான வாட்டர் பாட்டில்கள், பல சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது, இவை ஆரம்ப காலக்கட்ட வளர்ச்சியை பாதிப்பதாக அறியப்படுகிறது. பி.எல்.ஓ.ஸ் எனும் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், வேறுபட்ட குரல் வடிவங்களை காட்டிய எலிகளின் மூதாதையர்கள் பீபிஏ தாக்கம் அதிகம் உள்ளவர்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

“ஆரம்ப கால பீபிஏ தாக்கம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோய் வருவதற்கான ஆபத்துக்களை அதிகரிப்பதற்கான சாத்திம் இருக்கின்றன” என்று அமெரிக்க மிசோரி பல்கலைக்கழக பேராசிரியர் ஷெரில் ரோசென்ஃபெல்ட் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் “அழுவது தான் குழந்தைகளின் ஆரம்ப கால தொடர்பியல் வடிவம். அந்த அழுகைக்குரல் வடிவத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் ஆரம்பத்திலே ஆட்டிசத்தை கண்டறிவதற்கான கருவியாக இருக்கலாம். எனவே பலதலைமுறைகளாக பீபிஏ மீதான தாக்கம், குழந்தைகளின் குரல் வடிவங்களை பாதிக்கின்றனவா என்பதை நிருபிப்பது முக்கியமாகிறது,” என்றார்.

இந்த ஆய்விற்காக, ஆய்வாளார்கள் பெண் மற்றும் ஆண் எலிகளை மூன்றில் ஒரு விதமான உணவு பழக்கத்திற்கு உட்படுத்தினர்.

முதலாவதில் பீபிஏ, இரண்டாவது எமினில் எஸ்ட்ராடியோல் (EE) எனும் நாளங்களை பாதிக்கும் அமிலம், மூன்றாவதில் பாதிப்பில்லாத அமிலம்.

இந்த எலிகளின் அடுத்த தலைமுறை குட்டிகள் பாதிப்பில்லாத உணவு பழக்கத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இறுதியாக மூன்றாம் தலைமுறை எலிக்குட்டிகளின் (பீபிஏ மற்றும் EE நேரடி தாக்கம் இல்லாத குட்டிகள் ) குரல் வடிவங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

இந்த எலிக்குட்டிகள் அவர்களின் கூண்டிற்கு வெளியே தனிமையில் ”ரெக்கார்டிங் பாக்ஸில்” வைத்து பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த குட்டிகள் அதனுடைய பெற்றோர்களை அழைக்கின்ற போது வெளியிடுகிற குரல் வடிவங்கள், நேரங்கள் எல்லாம் அளவிடப்பட்டன. இந்த வடிவங்கள் அனைத்தும் பீபிஏ தாக்கம் பெறாத எலிகளின் குட்டிகளுடன் ஒப்பிடப்பட்டன.  

இதன் முடிவுகளில் பிறந்த, பிறகான காலகட்டத்தில் பீபிஏ மற்றும் EE தாக்கல் உள்ள எலிகளின் அடுத்த தலைமுறை எலிக்குட்டிகள் வேறுபட்ட குரல் வடிவங்களை காட்டின. இந்த எலிக்குட்டிகள் துயரத்தில் இருப்பதையும் வெளிப்படுத்தின. 

இந்த விளைவுகளை பலதலைமுறைகளாக உள்ள பீபிஏ மற்றும் EE தாக்கத்துடன் ஒப்பிடலாம், இந்த தாக்கத்தால் பாதிக்கப்பட்ட எலிகளின் அடுத்த தலைமுறை குட்டிகள் மன அழுத்தத்தில் இருப்பதையும் காட்டுகின்றன. 

இந்த ஆய்வை, ஆட்டிசம் மற்றும் பிற நரம்பியல் குறைபாடுகள் உள்ள மனிதர்களிடத்தில் காணப்படும் மனித தொடர்பியல் குறைபாடுகளுடனும் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------