முகப்பு »  நலவாழ்வு »  நீங்கள் சாப்பிடும் உணவு க்ளூட்டன் ஃப்ரீயாக இருக்கிறதா?

நீங்கள் சாப்பிடும் உணவு க்ளூட்டன் ஃப்ரீயாக இருக்கிறதா?

கோதுமை, ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் இந்த க்ளூட்டன் அதிகம் இருக்கிறது.

நீங்கள் சாப்பிடும் உணவு க்ளூட்டன் ஃப்ரீயாக இருக்கிறதா?

சீலியாக் நோய் என்பது சிறுகுடலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.  இதனால் இரைப்பை குடல் பிரச்னைகளான வயிற்று போக்கு, வயிற்று கடுப்பு, உடல் எடை குறைவு போன்றவை ஏற்படும்.  இந்த நோய் குழந்தைகளின் வளர்ச்சியையும் தடுக்க கூடியது.  க்ளூட்டன் அதிகபடியாக இருக்கும் உணவுகளை உட்கொள்வதால் இந்த நோயின் பாதிப்பு ஏற்படுகிறது.  கோதுமை, ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் இந்த க்ளூட்டன் அதிகம் இருக்கிறது.  இதனை தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு சீலியாக் நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம். 

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மார்கெட்களில் மற்றும் ஹோட்டல்களில் கிடைக்கக்கூடிய க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளையே வாங்கி சாப்பிடுவார்கள்.  ஆனால் “க்ளூட்டன் ஃப்ரீ” என்று லேபிள் ஒட்டப்பட்ட உணவுகளிலும் க்ளூட்டன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  American Journal of Gastroenterology பத்திரிக்கையின் தகவலின்படி, ஹோட்டல்களில் கிடைக்கக்கூடிய க்ளூட்டன் ஃப்ரீ பீட்சா மற்றும் பாஸ்தாக்களில் க்ளூட்டன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

க்ளூட்டன் நிறைந்திருக்கும் உணவை சாப்பிடுவதால் சிறுகுடலில் அழற்சி ஏற்பட்டு சீலியாக் நோய் ஏற்படுகிறது.  இதனால் செரிமானத்தில் மண்டலத்தின் இயக்கம் சீராக இருக்காது.  பெரும்பாலான ஹோட்டல்களில் கிடைக்கும் பாஸ்தா மற்றும் பீட்சா உணவுகளில் க்ளூட்டன் இருப்பதால், குறிப்பாக இரவு நேரங்களில் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 


நிமா க்ளூட்டன் சென்சார் பயன்படுத்தி 5,624 உணவுகளை பரிசோதித்ததில், க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளில் க்ளூட்டன் இருப்பதாக கண்டறிந்திருக்கின்றனர்.  மேலும் காலை உணவுகளில் 27 சதவிகிதமும், மதிய உணவுகளில் 29 சதவிகிதம் மற்றும் இரவு உணவுகளில் 34 சதவிகிதம் க்ளூட்டன் இருப்பதாகவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. 

ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலேயே முடிந்த அளவு சமைத்து சாப்பிடுங்கள்.  நாம் சாப்பிடும் உணவில் தரத்தை பொருத்து தான் உடலின் ஆரோக்கியமும் அமையும். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com