முகப்பு »  நலவாழ்வு »  சர்க்கரை நிறைந்த உணவுகள் ஆற்றலைத் தருகிறதா...? ஆய்வு கூறும் பகீர் உண்மைகள்

சர்க்கரை நிறைந்த உணவுகள் ஆற்றலைத் தருகிறதா...? ஆய்வு கூறும் பகீர் உண்மைகள்

சர்க்கரை சாப்பிட்டபின் கோபம், விழிப்புணர்வு, மன அழுத்தம் மற்றும் சோர்வு ஆகிய அம்சங்களில் விளைவுகளைப் பார்க்க முடிகிறது.

சர்க்கரை நிறைந்த உணவுகள் ஆற்றலைத் தருகிறதா...? ஆய்வு கூறும் பகீர் உண்மைகள்

சர்க்கரை சாப்பிடுவதால் ஆற்றல் திடீரென்று அதிகரிப்பது என்பது ஒரு கட்டுக்கதை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இனிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஆற்றல் அதிகரிப்பதாக மக்கள் நம்பிக்கைகளுக்கு மாறாக, சர்க்கரை உங்கள் மனநிலையை மோசமாக்குவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வாளரகள் சர்க்கரை அதிகமுள்ள உணவை  சாப்பிட்ட ஒரு மணிநேரத்தி சோர்வு அதிகரித்து விழிப்புணர்வை வெகுவாக குறைப்பதாக கண்டறிந்தனர். 

சர்க்கரை சாப்பிடுவதால் ஆற்றல் திடீரென்று அதிகரிப்பது என்பது ஒரு கட்டுக்கதை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இந்த ஆய்வு நரம்பியல் மற்றும் பயோபிகேவ்ரியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

சர்க்கரை மனநிலையை மேம்படுத்துவதாக பல கலாச்சாரங்களில் நம்பப்படுகிறது.அதனால் மக்கள் அதிகளவு சர்க்கரை மிக்க பானங்களை குடிக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கை தவறானது என்றும் சர்க்கரைக்கு எதிரான போர் ஒன்று தொடங்கும் நேரம் இது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


“எங்களது ஆய்வின் முடிவுகள் சர்க்கரை ஆற்றலை அதிகரிப்பது என்ற கூற்று உண்மையானது அல்ல. மாறாக அது மனநிலையை மோசமாக்குகின்றன. என்று ஆய்வாளர் மண்டாண்டிஸ் கூறியுள்ளார். இந்த ஆய்வில் ஆய்வாளர்கள் 31 படிப்பினைகள் (studies) வாயிலாக தரவுகளைப் பெற்றனர். சுமார் 1300 வயது வந்தோரிடம் ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.

சர்க்கரை சாப்பிட்டபின் கோபம், விழிப்புணர்வு, மன அழுத்தம் மற்றும் சோர்வு ஆகிய அம்சங்களில் விளைவுகளைப் பார்க்க முடிகிறது. சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால், ஒபிசிட்டி, சர்க்கரை நோய், வளர்சிதை மாற்றம் குறைவு ஆகியவை வெகுவாக அதிகரித்துள்ளன. 

ஆய்வின் முடிவுகள் சர்க்கரை அதிகமுள்ள பானங்கள் அல்லது ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதால் உடனடியாக ஆற்றல் என்பது கிடைப்பதில்லை என்று ஆய்வாளர் சாண்ட்ரா சுந்தரம் லீ கூறினார்(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------