முகப்பு »  நலவாழ்வு »  இப்படி உடற்பயிற்சி செய்தாலும் தவறில்லை!

இப்படி உடற்பயிற்சி செய்தாலும் தவறில்லை!

சாப்பிட்ட பிறகு டிவி பார்த்து கொண்டு அல்லது பாட்டு கேட்டு கொண்டு சின்ன சின்ன உடற்பயிற்சி செய்வதால் உடலில் எப்படியான விளைவுகள் ஏற்படுகிறது

இப்படி உடற்பயிற்சி செய்தாலும் தவறில்லை!

கேட்ஜெட்களை பயன்படுத்தி கொண்டே உடற்பயிற்சியும் செய்யலாம்

நம் அன்றாட வாழ்வில் கேட்ஜெட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால் உடற்பயிற்சியை நாம் செய்ய தவறி வருகிறோம். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, டி.வி, ஃபோன், வீடியோ கேம்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது, உங்கள் உடலில் எவ்வித இயக்கமும் இல்லாமல் போகிறது. மேலும் சாப்பிடும் உணவின் மொத்த கலோரிகளும் உடலில் தங்கி உடல் பருமனாகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், கேட்ஜெட்களை பயன்படுத்தி கொண்டே உடற்பயிற்சியும் செய்யலாம் எனவும் இதில் எவ்வித தவறும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

அண்மையில் ஒட்டாவா பல்கலைக்கழக்கத்தில் கேட்ஜெட்களை பயன்படுத்திக் கொண்டே உடற்பயிற்சி செய்வதனால் பலன் இருக்கிறதா என்பதை பரிசோதித்தனர். அதில் சாப்பிட்ட பிறகு டிவி பார்த்து கொண்டு அல்லது பாட்டு கேட்டு கொண்டு சின்ன சின்ன உடற்பயிற்சி செய்வதால் உடலில் எப்படியான விளைவுகள் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
 

முறைகளும் பலன்களும்: ஒட்டாவா ஆராய்ச்சியாளர்கள் 24 இளம்வயது ஆண்களை காலை வேளையில் 30 நிமிடங்களுக்கு ஸ்லோ ஜாக் செய்ய சொல்லியது. இந்த பயிற்சியின் போது அவரவருக்கு பிடித்தமானவற்றை செய்யலாம். அதாவது நெட்ஃப்ளிக்ஸில் அவர்களுக்கு விருப்பமான படம் பார்க்கலாம் அல்லது பிடித்தமான பாடல் கேட்கலாம். இப்படி 30 நிமிடங்கள் பயிற்சி செய்த ஒவ்வொருவரும் தனித்தனியே கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதாவது, உடற்பயிற்சிக்கு பின் மதிய உணவு எவ்வளவு சாப்பிட்டார்கள் மற்றும் ஒரு நாளில் எத்தனை முறை அவர்களது உடல் இயக்கம் இருக்கிறது என்பது கவனிக்கப்பட்டு வந்தது.

vl2m6d78

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

பாடல் அல்லது படம் பார்த்து கொண்டே உடற்பயிற்சி செய்யும்போது, சோர்வடையாமல் இருக்க முடிகிறது

இதனால் தெரிய வந்தது என்னவென்றால், இவ்வாறு டி.வி அல்லது பாட்டு கேட்டு கொண்டே உடற்பயிற்சி செய்தவர்கள் வழக்கத்துக்கு அதிகமாக உணவு உட்கொள்வதில்லை. இவ்வாறு பாடல் அல்லது படம் பார்த்து கொண்டே உடற்பயிற்சி செய்யும்போது, சோர்வடையாமல் இருக்க முடிகிறது. மேலும், உடற்பயிற்சி செய்ய தூண்டும் வகையில் அமைகிறது. உடல் பருமனான வயது முதிர்ந்தவர்களும், டீனேஜ் பெண்களும் இந்த ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. பொதுவாக, டிவி பார்த்து கொண்டு உடற்பயிற்சி செய்வதாலோ, பிடித்தமான பாடலை கேட்டு கொண்டு உடற்பயிற்சி செய்வதாலோ உடல் பருமனில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்பதை இந்த ஆய்வு மேற்கோள் காட்டியுள்ளது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------