முகப்பு »  நலவாழ்வு »  இதய ஆரோக்கியத்தை காபி பாதிக்குமா?

இதய ஆரோக்கியத்தை காபி பாதிக்குமா?

தமணிகளில் இறுக்கம் ஏற்பட்டால் இரத்தத்தை இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு கடத்த முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.  

இதய ஆரோக்கியத்தை காபி பாதிக்குமா?

காபி குடிப்பதால் இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று சில ஆய்வுகள் தெரிவித்த நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் காபி குடிப்பதனால் இருதயத்திற்கும் தமணிகளுக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.  ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இரத்தத்தை தமணிகள் இதயத்திற்கு கடத்துகிறது.  இந்த தமணிகளில் இறுக்கம் ஏற்பட்டால் இரத்தத்தை இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு கடத்த முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.  

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நாள் ஒன்றுக்கு 25 கப் காபி குடிப்பவர்கள் முதல் 1 கப் காபி குடிப்பவர்கள் வரை ஆய்வில் சேர்க்கப்பட்டனர்.  அதில் அதிகபடியாக காபி குடிப்பவர்கள் மற்றும் குறைவாக குடிப்பவர்கள் என இருவருக்குமே தமணிகளில் எவ்வித இறுக்கத்தையும் காண முடியவில்லை.  வயது முதிர்ச்சி, பாலினம், புகைப்பழக்கம், உயரம், எடை, மது பழக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை பொருத்து தான் தமணிகளில் இறுக்கம் ஏற்படும்.  

8412 பேருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் இன்ஃப்ராரெட் பல்ஸ் வேவ் பரிசோதனை செய்யப்பட்ட போது அதிகபடியாக காபி குடிப்பவர்களுக்கு காபியால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.  புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளோர்களுக்கு தான் தமணிகளில் பிரச்சனை ஏற்படுகிறது என்பதையும் தெளிவாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  இருந்தபோதிலும் அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்தைதான் உருவாக்கும் என்பதால் காபியையும் அளவாகவே குடிக்க பழகுங்கள்.


கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com