முகப்பு »  நலவாழ்வு »  அதிகமாக தூங்கினால் பக்கவாதம் வருமா..!! ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்..!

அதிகமாக தூங்கினால் பக்கவாதம் வருமா..!! ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்..!

7 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் கொண்டவர்களை விட, ஒரு இரவுக்கு 9 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்கும் நபர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான 23 சதவீதம் அதிக வாய்ப்புள்ளது எனப் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

அதிகமாக தூங்கினால் பக்கவாதம் வருமா..!! ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்..!

அதிக நேர தூக்கம் பல உடல்நலக் கேடுகளை விளைவிக்கிறது.

ஏழு முதல் எட்டு மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் கொண்டவர்களை விட, ஒரு இரவுக்கு ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்கும் நபர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான 23 சதவீதம் அதிக வாய்ப்புள்ளது எனப் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. நீண்ட தூக்கங்களும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று முடிவுகள் வெளிப்படுத்தின.

மதிய உணவை உட்கொண்ட பிறகு, ஒன்று முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் தூக்கத்தை வழக்கமாக எடுத்துக் கொண்டவர்களை விட, 90 நிமிடங்களுக்கும் மேலாக நீடிக்கும் தூக்கத்தை வழக்கமாகக் கொண்டவர்களுக்கு 25 சதவிகிதம் அதிகமாக பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நியூராலஜி எனும் அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூரோலஜியின் ஆன்லைன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

குட்டித் தூக்கமே தூஙாதவர்கள் அல்லது ஒன்று முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் குட்டித் தூக்கம் கொள்ளும் நபர்களை விட, 31 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் தூக்கம் கொண்ட நபர்களுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.


"நீண்ட தூக்கத்தை எடுத்துக்கொள்வதும், இரவில் அதிக நேரம் தூங்குவதும், பக்கவாதம் அதிகரிக்கும் அபாயத்துடன் எவ்வாறு பிணைக்கப்படலாம் என்பதைப் புரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை, ஆனால் முந்தைய ஆய்வுகள் நீண்ட குட்டித் தூக்கம் தூங்குபவர்களுக்கும் (long nappers) மற்றும் வெகு நேர்ம் தூங்குபவர்களுக்கும் (sleepers) தங்கள் கொழுப்பின் அளவிலும், இடுப்பு சுற்றளவிலும் சாதகமற்ற மாற்றங்களைக் கொண்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டியது. அவை இரண்டுமே பக்கவாதத்திற்கான ஆபத்து காரணிகள்" என்று சீனாவின் வுஹானில் உள்ள ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர் சியாமின் ஜாங் கூறுகிறார்.

"கூடுதலாக, நீண்ட குட்டித் தூக்கமும், நீண்ட தூக்கமும் ஒட்டுமொத்த செயலற்ற வாழ்க்கை முறையை பரிந்துரைக்கக்கூடும், இது பக்கவாதம் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையது" என்றும் ஜாங் கூறுகிறார்.

இந்த ஆய்வில் சீனாவில் சராசரியாக 62 வயதுடைய 31,750 பேர் ஈடுபட்டனர். ஆய்வின் தொடக்கத்தில் மக்களுக்கு பக்கவாதம் அல்லது பிற பெரிய உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை.

அவர்கள் சராசரியாக ஆறு ஆண்டுகள் பின்பற்றப்பட்டனர். அந்த நேரத்தில், 1,557 பக்கவாதம் பாதிப்பு இருந்தன. மக்கள் அவர்களின் தூக்கம் மற்றும் குட்டித் தூக்க பழக்கம் குறித்து கேள்விகள் கேட்டனர்.

மிதமான ஸ்லீப்பர்கள் மற்றும் நாப்பர்களைக் காட்டிலும் நீண்ட ஸ்லீப்பர்கள் மற்றும் நீண்ட நாப்பர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 85 சதவீதம் அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

"இந்த முடிவுகள் napping and sleeping காலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன மற்றும் நல்ல தூக்க தரத்தை பராமரிக்கின்றன, குறிப்பாக நடுத்தர வயது மற்றும் வயதானவர்களுக்கு" என்று ஜாங் கூறியுள்ளார்.

(Except for the headline, this story has not been edited by NDTV staff and is published from a syndicated feed)

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------