முகப்பு »  நலவாழ்வு »  காபி வாசனை உங்களின் பகுப்பாய்வுத் திறனை அதிகரிக்கும்: ஆய்வு

காபி வாசனை உங்களின் பகுப்பாய்வுத் திறனை அதிகரிக்கும்: ஆய்வு

காபி வாசனை பகுத்தறிவு பணிகளில் சிறந்த செயல்திறனை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது

காபி வாசனை உங்களின் பகுப்பாய்வுத் திறனை அதிகரிக்கும்: ஆய்வு

சிறப்பம்சங்கள்

  1. காபியை நுகர்ந்தால் பகுப்பாய்வு செயல்திறனை அதிகரிக்கிறது
  2. காபி வாசனை மக்களை இன்னும் எச்சரிக்கை மற்றும் சுறுசுறுப்பாக வைக்கும்
  3. காபி இதய நோய், நீரிழிவு மற்றும் டிமென்ஷியா ஆபத்தை குறைக்கலாம்

நீங்கள் காபி வாசனையை விரும்பினால், பகுத்தறிவு பணிகளில் சிறந்த செயல்திறனை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தளவில், காஃபின் இல்லாத காபியை நுகர்ந்தால் அது காபியை குடித்ததுப் போல் விளைவை ஏற்படுத்துகிறது. "காபி போன்ற வாசனை மட்டும்  மக்கள் பகுப்பாய்வு பணிகளை சிறந்து செய்ய உதவுகிறது என்றில்லை, இருந்தாலும் இது சுவாரஸ்யமானது," என்று அமெரிக்காவின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இணை ஆசிரியர் அட்ரியானா மாட்ஜரோவ் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் உளவியல் பத்திரிகையின் இந்த ஆய்வில், ஆராய்ச்சி குழுவானது, 10-கேள்விகளை GMAT அல்ஜீப்ரா பரிசோதனையை ஒரு கணினி ஆய்வகத்தில் சுமார் 100 இளங்கலை வணிக மாணவர்களுக்கு வழங்கியது.


பங்கேற்பாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழு சுற்றுப்புறத்தில் காபியின் வாசனையோடு சோதனையாக எடுத்துக் கொண்டது. அதே நேரத்தில் காபி வாசனை இல்லாத அறையில் இன்னொரு குழு அமரவைக்கப்பட்டது.

மலர் வாசனை அல்லது பிற வாசனையுடன் ஒப்பிடுகையில் பங்கேற்பாளர்கள் காபி வாசனை முன்னிலையில் அதிக எச்சரிக்கை மற்றும் சுறுசுறுப்பாக உணரப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளனர். காபி வாசனையின் வெளிப்பாடு மன பணிகளை செய்வதற்கான தங்கள் செயல்திறனை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

செயல்திறனைப் பற்றிய எதிர்பார்ப்புகளில், காபி வாசனை மட்டுமே மக்களுக்கு அதிக எச்சரிக்கை மற்றும் ஆற்றல்மிக்கவர்களாக ஆக்குகிறது என்ற நம்பிக்கைகளால் விளக்க முடியும் என்று முடிவுகள் தெரிவிக்கிறது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com