முகப்பு »  நலவாழ்வு »  பெண்களை தாக்கும் மைக்ரேன்

பெண்களை தாக்கும் மைக்ரேன்

உடலில் சுரக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தான் மைக்ரேன் உருவாவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

பெண்களை தாக்கும் மைக்ரேன்

அய்யோ! தலைவலி தாங்க முடியல! தலையே வெடிச்சிரும் போல இருக்கு! வலி மண்டய பொளக்குது போன்ற வார்த்தைகளை காலையில் எழுந்திருக்கும் போதே நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கேட்டிருப்போம். இந்த தலைவலியானது ஒருவரின் கோபத்தையும் தூண்டலாம் அல்லது மன உளைச்சலையும் கொடுக்கலாம். பெரும்பாலானவர்களை வாட்டி எடுக்கும் மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஐந்தில் ஒருவருக்கு வரக்கூடும். இந்த வலி வரும்போது யாரிடமும் பேச பிடிக்காமல், வெளிச்சம் இருக்கும் இடத்தை தவிர்ப்பது என எல்லாவற்றிலும் எரிச்சலோடு இருப்பார்கள்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி பற்றி அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுவாக பெண்களுக்கு ஹார்மோன் சீரற்ற நிலையில் அதாவது மாதவிடாய் காலம், குழந்தைப்பேறு காலம், மாதவிடாய் சுழற்சி நிற்கும் வேளைகளில் இது ஏற்படுகிறது. ஆண்களை விடப் பெண்களுக்கே அதிகமாக வருவதுண்டு. ஏனெனில், பெண்களுக்கு அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் சுரப்பாலும் மற்ற ஹார்மோனாலும் ஏற்படுகிறது. வேலை, சமூகம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் என எல்லாவற்றையும் சமமாக நிர்வகிக்கும் 30 முதல் 39 வயதுள்ள பெண்களுக்கே இந்த மைக்ரேன் பிரச்சனை வருகிறது.

உடலில் சுரக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தான் மைக்ரேன் உருவாவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரக்கூடிய மைக்ரேனுக்கு வெவ்வேறு வகையில் சிகிச்சையளிக்கப் படுகிறது. காரணம், பெண்களுக்கு இதன் தீவிரம் அதிகமாக இருக்கும். சரியான நேரத்தில் நோயின் அறிகுறியை கண்டுபிடித்து, உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்தலாம்.
நரம்பியல் கோளாறால் ஏற்படுவதுதான் மைக்ரேன். இந்த வலியின் போது தலைசுற்றல், குமட்டல், வாந்தி, கண் இருட்டிக்கொள்வது போன்றவை உண்டாகும். மைக்ரேனுக்கு மன அழுத்தமும் ஒரு காரணம். மைக்ரேனால் உடலுக்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் தவறாமல் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------