முகப்பு »  நலவாழ்வு »  உங்கள் வேலை மனதளவில் உங்களை சோர்வடையச் செய்கிறதா...? இந்த நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது

உங்கள் வேலை மனதளவில் உங்களை சோர்வடையச் செய்கிறதா...? இந்த நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது

22 வருட காலத்தில் சுமார் 70,000க்கும் அதிகமான பெண்கள் வேலைசார்ந்த மன அழுத்தம் காரணமாக நீரிழிவு நோயை எதிர்கொண்டதாக தெரிவிக்கிறார்.

உங்கள் வேலை மனதளவில் உங்களை சோர்வடையச் செய்கிறதா...? இந்த நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது

வேலை தேடி அலைபவர்களில் 21 சதவீதத்தினர் டைப் 2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள் ஐரோப்பிய எண்டோகிரினாலஜியில் வெளியிடப் பட்டது. இந்த ஆய்வு மனரீதியாக சோர்வடையச் செய்யும் வேலைகள் பெண்களுக்கு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கலாம். என்று கூறுகிறது. மனதளவில் சோர்வு தரும் வேலைக்கும் உள்ளவர்கள் உடல் நலம் கெடுவதற்கான நிலைக்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. சமூகத்தில் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இந்த நோய் ஆரோக்கிய குறைபாடுகளான ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்ஸ், பார்வைத் திறன் இழத்தல், சீறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது. 

 டைப் 2 சர்க்கரை நோய்க்கு பல காரணிகள் உண்டு. உடல் பருமன், உணவு, உடற்பயிற்சி இன்மை, புகைபிடித்தல், குடும்ப நோயினாலும் ஏற்படலாம். 

இந்த ஆய்வு,  நோய்த்தாக்கம் மற்றும் மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி மையத்தில் உள்ள  விஞ்ஞானியான கை ஃபாஹெராஸ்சி மற்றும் உடன்பணிபுரிபவர்களால் மேற்கொள்ளப்பட்டது. 22 வருட காலத்தில் சுமார் 70,000க்கும் அதிகமான பெண்கள் வேலைசார்ந்த மன அழுத்தம் காரணமாக நீரிழிவு நோயை எதிர்கொண்டதாக தெரிவிக்கிறார். 75 சதவீத பெண்கள் டீச்சர் வேலையில் இருப்பவர்களும். 24 சதவிகிதத்தினர் வேலை தேடிகிற அலைச்சலில் உள்ளவர்கள் எனத் தெரிவிக்கின்றனர் வேலை தேடி அலைபவர்களில் 21 சதவீதத்தினர் டைப் 2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டது. இது தவிர அவர்களின் வயது, உடல் செயல்பாடு, உணவு முறை, புகைபிடித்தல் பழக்கம், இரத்த அழுத்தம் குடும்பத்திற்கான நீரிழிவு நோய் ஆகியவையும் வெவ்வேறு ஆபத்துகளைக் கொடுக்கிறது. 


டாக்டர் ஃபாஹெராஸ்ஸி “இந்த பெண்களின் நீரிழிவு ஆபத்து அதிகரித்திருப்பதை நேரடியாக தீர்மானிக்க முடியாவிட்டாலும், மன அழுத்தத்தை கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை அடிகோடிட்டுக் காட்டுகிறது.” பணியிடங்களில் உள்ள அழுத்தம் ஆண்களை விட பெண்களுக்கே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.என்பதால் நாள்பட்ட மன அழுத்தம் டைப் 2 சர்க்கரை நோயினை ஏற்படுத்துகிறது. இந்த ஆராய்ச்சி நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையை எப்படி மேம்படுத்த முடியும் என்ற புதிய அணுகுமுறைகளை கண்டறிய உதவும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------