முகப்பு »  நலவாழ்வு »  தனிமையில் வாழ்பவர்களா நீங்கள்?? இதை படியுங்கள்!!!

தனிமையில் வாழ்பவர்களா நீங்கள்?? இதை படியுங்கள்!!!

வெவ்வேறு வயதினரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த  மனநல பிரச்னை ஏற்பட 1.39 முதல் 2.43 மடங்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தனிமையில் வாழ்பவர்களா நீங்கள்?? இதை படியுங்கள்!!!

ஆண், பெண் என யாராக இருந்தாலும் தனிமையில் வாழ்பவராக இருந்தால் நிச்சயம் மனநல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.  வயது, பாலினம் ஆகியவற்றை கடந்ததுதான் மனநலன்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் குடும்பம், நண்பர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் இருப்பவர்களை காட்டிலும் தனிமையில் இருப்பவர்களுக்கு மனநல கோளாறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  PLOS ONE என்னும் பத்திரிக்கையில் வெளிவந்த ஆய்வறிக்கைப்படி, 16 வயது முதல் 64 வயது வரை இருப்பவர்களில் 20500 பேரிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 

Clinical Interview Schedule -Revised என்ற நரம்பு மண்டல பிரச்னையை பரிசோதிக்கும் முறையை பின்பற்றி Common Mental Disorder பிரச்னை இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது.  இதில் 1993, 2000, 2007 ஆகிய வருடங்களில் 8.8 சதவிகிதம், 9.8 சதவிகிதம், 10.7 சதவிகிதத்தினர் தனிமையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.  இவர்களை வைத்து பரிசோதனை செய்ததில், அனைவருக்கும் common Mental Disorder பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது. 


வெவ்வேறு வயதினரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த  மனநல பிரச்னை ஏற்பட 1.39 முதல் 2.43 மடங்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  இந்த மனநல பிரச்னை, ஒருவரின் வாழ்க்கை தரத்தை பாதிப்பதோடு, உடல்நலத்தையும் பாதிக்கிறது.  முடிந்த வரையில் நிறைய நேர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.  உங்களை மகிழ்விக்கும் விஷயங்களை தவறாமல் செய்து மனதை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்து கொள்ளுங்கள்.  மனநலன் சிறப்பாக இருந்தால்தான் உடல் நலமும் சிறப்பாக இருக்கும். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com