முகப்பு »  நலவாழ்வு »  கர்ப்ப காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் -ஆய்வு கூறும் விளக்கம்

கர்ப்ப காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் -ஆய்வு கூறும் விளக்கம்

கர்ப்ப காலத்திற்கு முன்னர் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற பொது சுகாதார முயற்சிகளை தரவுகள்  ஆதரிக்கின்றன. 

கர்ப்ப காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் -ஆய்வு கூறும் விளக்கம்

கர்ப்ப காலத்தில் ஒரு சிகரெட் புகைத்தாலும் திடீரென குழந்தை இறப்பு ஆபத்தை (SUID) இரட்டிப்பாக்க முடியும் என்று ஒரு ஆய்வு எச்சரித்தது. 

திடீரென குழந்தை இறப்பு ஆபத்து என்பது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தையின் மரணத்தையே வரையறுக்கிறது. இதில் ஆய்வுக்கு முன்னர் காரணம் தெளிவாக இல்லை. தினமும் ஒரு பெண் சராசரியாக 1-20 சிகரெட்டுகளை புகைத்தால் ஒவ்வொரு கூடுதல் சிகரெட்டிற்கும் குழந்தையின் இறப்புகான அபாயம் 0.07ஆக அதிகரிப்பதாக குழந்தை மருத்துவ வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. 

இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரான டாட்டினா ஆண்டர்சன், “இந்த தகவலுடன் புகைபிடிக்கும் பழங்க வழக்கங்களைப் பற்றி டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்ப காலத்தில் தினசரி புகைபிடிக்கப்படும் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் திடீரென குழந்தை இறப்பு ஆபத்தும் நிகழ்கிறது.” என்று தெரிவித்துள்ளார். “இந்த அபாயத்தைப் பற்றி பெண்களுக்கு அறிவுறுத்துவது இந்த துன்பகரமான காரணங்களிலிருந்து குழந்தை இறப்பை குறைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


பெண்கள் மூன்றாவது ட்ரிமிஸ்டரில் புகைப்பதைக் குறைக்கும் போது இறப்புக்கான ஆபத்து 12சதவீதம் குறைகிறது. புகைப்பதை மொத்தமாக நிறுத்தும் போது 23 சதவீத இறப்புக்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.

இந்த ஆய்விற்காக புகைபிடிக்காதவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் மூன்று மாதங்கள் முன்பு வரை புகைப்பிடிப்பவர்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்விற்காக கம்ப்யூட்டேஷனல் மாடலிங் நுட்பங்களை அணி பயன்படுத்தியது. கர்ப்ப காலத்திற்கு முன்னர் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற பொது சுகாதார முயற்சிகளை தரவுகள்  ஆதரிக்கின்றன. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------