முகப்பு »  நலவாழ்வு »  குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்

78 மில்லியன் குழந்தைகளுக்கு பிறந்த உடனே தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 78 மில்லியன் குழந்தைகளுக்கு பிறந்த உடனே தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பிறந்த குழந்தைகக்கு தாய்ப்பால் கொடுப்பதினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக, பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதினால், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன என்று மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் அளிக்கும் நாடுகளின் பட்டியலில் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்த தாய்மார்கள் 65 சதவிதத்துடன் முதல் இடத்தில் உள்ளனர். 32 சதவிதத்துடன் கிழக்கு ஆசியா, பசிபிக் பகுதிகளை சேர்ந்த நாடுகள் இறுதி நிலையில் உள்ளனர்


“பிறந்த குழந்தைக்கு, ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே தாய்ப்பால் கொடுப்பது, குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்” என்று உலக சுகாதார மையத்தின் பொது மருத்துவர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்

76 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும், பல மில்லியன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் சென்றடைவதில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தாய்ப்பாலுக்கு நிகரான மற்ற சப்ஸ்டிட்யூட் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, பிறந்த ஒரு மணி நேரதில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------