முகப்பு »  நலவாழ்வு »  ஆரோக்கியமான உணவுமுறை மெனோபாஸ் காலத்தை எளிதாக்க உதவும்

ஆரோக்கியமான உணவுமுறை மெனோபாஸ் காலத்தை எளிதாக்க உதவும்

அரிஸ்டாட்டில் காலம் முதலே விவாதிக்கப்பட்ட ஒன்று என்றாலும் மெனோபாஸ் பற்றிஅறிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

ஆரோக்கியமான உணவுமுறை மெனோபாஸ் காலத்தை எளிதாக்க உதவும்

சிறப்பம்சங்கள்

  1. Average age for natural menopause is 51
  2. A healthy diet can delay the early onset of menopause
  3. Nutritious diet can also reduce the symptoms of menopause

அரிஸ்டாட்டில் காலம் முதலே விவாதிக்கப்பட்ட ஒன்று என்றாலும் மெனோபாஸ் பற்றிஅறிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. புதிய ஆராய்ச்சி ஒன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இந்தச் சிக்கலான நேரத்தை எப்படி நிர்வகிக்கலாம் என விளக்குகிறது. இயல்பான மெனோபாஸ்க்கு (365 நாட்கள் தொடர்ச்சியாக மாதவிடாய் இல்லாமல் இருப்பது) சராசரி வயது 51. சிலருக்கு சீக்கிரமே அறிகுறிகள் தோன்றும். ஒவ்வொருவருக்கும் அறிகுறிகள் மாறுபடும். எடை அதிகரிப்பு -குறிப்பாக வயிற்றுப் பகுதியில், தசை பிடிப்பு,  அடிக்கடி மாறும் மனநிலை மாற்றம் ஆகியவை ஏற்படலாம். சிலநேரம் பெண்களுக்கு இதய நோய் மற்றும் எலும்புப்புரை ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

ஒவ்வொரு பெண்ணின் அனுபவமும் வெவ்வேறாக இருக்கின்றது. பரம்பரை, வாழ்க்கை முறை, வளர்சிதை மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவை காரணமாக இருக்கும். ஊட்டச்சத்து மிக்க உணவுகள், உடற்பயிற்சி, சரியான எடையைப் பராமரிப்பது போன்றவை மெனோபாஸ் காலத்தை எளிதாகக் கடந்துசெல்ல உதவும்.

லீட்ஸ் பல்கலைக்கழகம், நான்கு வருடங்களுக்கு 914 பெண்களை ஒரு குழு மூலம் கண்காணித்தது. மீன், பருப்பு வகைகள் அதிக அளவு உட்கொள்வதாலும் வைட்டமின் பி 6 மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை உட்கொள்வதாலும் மெனோபாஸ் விரைவில் ஏற்படுவது தடுக்கப்படுகிறது எனக் கண்டறியப்பட்டது.  இந்த ஆய்வில்  சுத்திகரிக்கப்பட்ட பாஸ்தா மற்றும் அரிசி சீக்கிரம் மெனோபாஸ் ஏற்பட வழிவகுத்ததும் கண்டறியப்பட்டது.


வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளான பெர்ரி,எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் தக்காளி, கீரைகள், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், வெங்காயம், பூண்டு, பழவகைகள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகள், விதைகள், வெண்ணெய், கடல் உணவுகள், க்ரீன் டீ, மற்றும் கறுப்பு சாக்லேட் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் உணவு வகைகள் மெனோபாஸ் காலத்துக்கு மிகவும் நல்லது.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

இதயம், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள், உடற்பயிற்சி இவை மெனோபாஸ் காலத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கால்சியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே ஆகியவை எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை.  பால்,கீரைகள் மற்றும் மீன் போன்ற உணவுகளிலும் இவை கிடைக்கும்.

பல்வேறு வகையான உடற்பயிற்சிகள்,  ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள் இதய ஆரோக்கியத்தை  அதிகரிக்கும். எடை பராமரிப்புக்கும் உதவும். எந்த வயதிலும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------