முகப்பு »  நலவாழ்வு »  ஆரோக்கியமான சருமத்திற்கு அரோமாதெரபி

ஆரோக்கியமான சருமத்திற்கு அரோமாதெரபி

நல்ல தூக்கம் தான் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிபடையானது. தூக்கத்தின் தரத்தை பொருத்து ஒருவரின் உடல் ஆரோக்கியம் மாறுபடும்.

ஆரோக்கியமான சருமத்திற்கு அரோமாதெரபி

அலோபதி மருத்துவத்தை விடுத்து ஆயுர்வேதம், சித்தா, யுனானி, அக்குபஞ்சர் போன்ற மாற்று மருத்துவத்தின் மீதான படையெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த மாற்று மருத்துவத்தினால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை என்பதால் மட்டுமே மக்கள் இதனை நாடுகிறார்கள். குறிப்பாக அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இதில் நிரந்தர தீர்வு உண்டு. தலைமுடி மற்றும் சரும பிரச்சனைகளும் நம் அன்றாட கவலைகளில் ஒன்றாகிவிட்டது. சரும அழகை மேம்படுத்துவதில் அரோமா தெரபிக்கு பெரும் பங்கு உண்டு.

அரோமாதெரபி எனப்படுவது இயற்கையாக கிடைக்கப்படும் சில தாவரங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாறுகள் மற்றும் எண்ணெயின் வாசனை மூலம் உடல் மற்றும் மன நலன்களை மேம்படுத்தும் சிகிச்சை ஆகும். உடலும் மனமும் ஆரோக்கியமானதாக இருக்கும்போது அங்கு அழகுக்கும் பஞ்சமில்லை என்கிறார் அரோமா தெரபிஸ்ட் ப்ளாஸம் கோச்சர். இந்த குறிப்பிட்ட நறுமண எண்ணெய்களில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரும்போது மூளை மற்றும் உடலின் செயல்பாடுகள் தூண்டப்படுகிறது. மேலும் இந்த நறுமணத்தை நுகர்வதால் மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு ஆற்றலை தருகிறது. அரோமா என்பதற்கு நறுமணம் என்றும் தெரபி என்பதற்கு சிகிச்சை என்றும் பொருள். ஆக, இது நறுமண மருத்துவம்தான். நறுமணத்தினால் மட்டுமே ஒருவரின் நோய்களை குணப்படுத்தவும், மனதை ஆற்றுப்படுத்தவும் முடியுமென்றால் இந்த சிகிச்சை முறையானது நமக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் என்று சொன்னால் மிகையாகாது.

இந்த நறுமண எண்ணெய்கள் பூக்கள், மரங்கள், பச்சிலைகள், வேர்கள் மற்றும் பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க எவ்வித இரசாயணங்களும் இன்றி இயற்கை பொருட்களை வைத்து தயாரிக்கப்படுகிறது. மல்லிகை, பாதாம், யூக்லிப்டஸ், எலுமிச்சை போன்ற தைலங்கள் பொதுவானவை. அவரவர் நோய்க்கேற்ப எண்ணெய்களை தேர்வு செய்து சிகிச்சையளிக்கபடுகிறது. நம் சமையல் அறையில் இருக்கக்கூடிய சோம்பு, கிராம்பு போன்ற மசாலா பொருட்களின் வாசனை நம்மை ஆட்கொள்வதைபோல தோட்டத்தில் இருக்கக்கூடிய ஜாதிமல்லியில் வாசனை நம்மை கிரங்க செய்வதும் ஒருவித அரோமாதெரபி தான் என்று IANS (Indo Asian News Service)க்கு மின் அஞ்சல் மூலம் விளக்கம் அளித்துள்ளார் ப்ளாஸம் கோச்சர்.


இந்த சிகிச்சை உற்சாகத்தை கொடுத்து மன அழுத்தம் குறைய செய்கிறது. மேலும் மனதை ஆற்றுப்படுத்தி இரவில் நிம்மதியான தூக்கத்தை தருகிறது. நல்ல தூக்கம் தான் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிபடையானது. தூக்கத்தின் தரத்தை பொருத்து ஒருவரின் உடல் ஆரோக்கியம் மாறுபடும். தூக்கம் சீராக இருக்கும்போது மனம் அமைதி பெற்று உள்ளிருந்து அழகு மேம்படுவதனால், நேர்மரையான எண்ணங்களையும் தன்னம்பிக்கையையும் அள்ளித் தருவதோடு அழகு உணர்வை மேலோங்கச் செய்கிறது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com