முகப்பு »  நலவாழ்வு »  காய்கறி மற்றும் பழங்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்ல மன நலத்திற்கும் ஏற்றது

காய்கறி மற்றும் பழங்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்ல மன நலத்திற்கும் ஏற்றது

பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் நலம் மட்டுமல்ல மன நலமும் ஏற்படுவதாக ஆய்வாளர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

காய்கறி மற்றும் பழங்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்ல மன நலத்திற்கும் ஏற்றது

றப்பான உணவு பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒருவர் நீண்டகால பயன்களை பெற முடியும். 

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மட்டுமல்ல உளவியல் ரீதியான மன நலத்திற்கும் உதவும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

இந்த ஆராய்ச்சியில் அன்றாடம் தன் வாழ்வில் பழம் மற்றும் காய்கறிகளின் சாப்பிடுபவர்களுக்கு உளவியல் ரீதியான நேர்மறையான மாற்றத்தை காட்டியது. குறிப்பாக அன்றாட உணவில் ஒரு பகுதியாக பழங்களை சாப்பிடுவதால் மன நலனிலும் சமமான விளைவுகளை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் சமூக அறிவியல் மற்றும் மருந்து என்ற பத்திரிக்கையில் (Journal of Social Science & Medicine) வெளியிடப்பட்டது. 

பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் நலம் மட்டுமல்ல மன நலமும் ஏற்படுவதாக ஆய்வாளர் பீட்டர் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்சியை விளக்கி பீட்டர், “ இந்த ஆராய்சி ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும்  மிகப்பெரிய மாதிரி எடுத்து நடத்தப்பட்டது. அந்த முடிவுகள் தெளிவாக உள்ளன. அதிக பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் மக்கள் குறைவாக சாப்பிடுவோரை விட திருப்தியான வாழ்க்கையை வாழ்வதாக” தெரிவித்தார்.  சிறப்பான உணவு பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒருவர் நீண்டகால பயன்களை பெற முடியும். 


கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------