முகப்பு »  நலவாழ்வு »  3 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கிய குறையும் - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

3 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கிய குறையும் - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

ஒரு நாளுக்கு 3 மணி நேரம், ஏதேனும் ஒருவகை உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கியம் பாதிக்கும் என்று புதிய ஆய்வு கூறுகிறது

3 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கிய குறையும் - எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

உடல் பயிற்சி செய்வது ஆரோக்கியமானது என்று தான் இதுவரை கேட்டிருப்போம். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என கூறவது போல், ஒரு நாளுக்கு 3 மணி நேரம், ஏதேனும் ஒருவகை உடல் பயிற்சி செய்தால் மன ஆரோக்கியம் பாதிக்கும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

லான்செட் சைக்காட்ரி என்ற மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வில், ஒரு வாரத்தில் 3 முதல் 5 முறை வரை உடல் பயிற்சி செய்பவர்களின் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அதற்கு குறைவாகவோ அல்லது அதிகம் உடல் பயிற்சி செய்வோரது மன ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு 23 முறைக்கு மேல் உடல் பயிற்சி செய்தாலோ அல்லது 3 மணி நேரங்கள் தொடர்ந்து உடல் பயிற்சி செய்தாலோ மன ஆரோக்கியம் மோசமடையும் என்கிறார்கள் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.


இந்த ஆராய்ச்சிக்காக அமெரிக்கா முழுவதும் உள்ள 50 மாநிலங்களில் 12 லட்சம் பேரிடம் தகவல் சேகரிக்கப்பட்டது. சைக்கிளிங், ஜிம்மிங், ஜாகிங் என பல வகையான உடல் பயிற்சி முறைகள் கொடுத்து சோதிக்கப்பட்டனர்.

குழு விளையாட்டுக்கள், ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம் செல்வது மன ஆரோக்கியத்தை பெரும்பாலும் பாதிக்கும் செயல்களாக தெரிய வந்துள்ள்து. முறையே 22.3% , 21.6% , 20.1% மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியபட்டுள்ளது.
அதிக நேரம் வீட்டு வேலைகள் செய்வது கூட மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. குறைந்த நேரம் வீட்டு வேலை செய்தாலும் பிரச்சனை என்கிறார்கள்.

மன அழுத்தம் உலக அளவில் மக்களின் இயலாமையை அதிகரித்து வருகிறது. உடனடியாக மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ முறைகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com