முகப்பு »  நலவாழ்வு »  உடற்பயிற்சியினால் சிந்திக்கும் திறன் அதிகரிப்பது எப்படி…? அறிந்து கொள்வோமா…

உடற்பயிற்சியினால் சிந்திக்கும் திறன் அதிகரிப்பது எப்படி…? அறிந்து கொள்வோமா…

அன்றாடம் ஏரோபிக் உடற்பயிற்சிகளான, நடைப்பயிற்சி, சைக்கிளிங் அல்லது படியேறுதல் ஆகிய பயிற்சிகளை செய்து வந்தால் வயது வித்தியாசம் ஏதுமின்றி சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது.

உடற்பயிற்சியினால் சிந்திக்கும் திறன் அதிகரிப்பது எப்படி…? அறிந்து கொள்வோமா…

உடற்பயிற்சியின் பயன்கள் கணக்கிலடங்காதவை

தொடர்ச்சியாக ஏரோபிக் உடற்பயிற்சி முறையை செய்து வந்தால் சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது. இந்த உடற்பயிற்சியின் நன்மைகள் இளையவர் முதல் முதியவர்கள் வரையான அனைவருக்கும் கிடைக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஆய்வின் படி, அன்றாடம் ஏரோபிக் உடற்பயிற்சிகளான, நடைப்பயிற்சி, சைக்கிளிங் அல்லது படியேறுதல் ஆகிய பயிற்சிகளை செய்து வந்தால் வயது வித்தியாசம் ஏதுமின்றி சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது.

 சிந்திக்கும் திறன் என்றால் குறிப்பாக ஒரு செயலை செய்து முடிக்கும் செயல்பாட்டையே (executive function) குறிப்பிடுகிறார்கள். வேலையை செய்து முடிக்கும் திறன் என்பது நடத்தை, கவனத்தை ஒருங்கிணைத்து குறிக்கோளை அடைதல் என்பதையே குறிப்பிடுகின்றனர். வயது ஆகும் போது சிந்திக்கும் திறன் என்று குறையும். ஆனால் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் போது இதைத் தடுக்கலாம். 


இந்த ஆய்விற்காக 20 வயது முதல் 67 வயது வரையான 138 நபர்களை முறையான உடற்பயிற்சி ஏதும் செய்யாத சராசரி உடல்நலமுள்ளவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.  ஆறு மாதங்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய ஊக்குவித்தனர்.

ஆய்வு தொடங்குவதற்கு முன் கல்வி மற்றும் நினைவுத்திறன் மற்றும் சிந்தனை திறமை ஆகியவற்றை குறிப்பெடுத்துக் கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரு உடற்பயிற்சி மையத்தில் உடற்பயற்சி செய்ய வைத்து அவர்களின் உடலின் முன்னேற்றத்தைக் கண்காணித்தனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களின் இதய துடிப்பு, சிந்திக்கும் திறன் ஆகியவற்றை முறையாக கண்காணித்தனர்.

ஆறு மாதத்திற்குப் பின் 75 சதவீதம் அவர்களின் இதய துடிப்பு விகிதம் அதிகரித்திருந்தது. இந்த ஆய்வின் முடிவினை நரம்பியல் பத்திரிகையில் வெளியிட்டனர்.  அதன்படி சிந்திக்கும் திறன் 0.25 சதவீதத்திலிருந்து 0.50 வரை அதிகரித்தது. 60 வயதுக்குட்பட்டவர்களின் 0.596 புள்ளிகளாக அதிகரித்தது. இந்த ஆய்வில் மூளையின் வெளிப்புற அடுக்கு தடிமனாக மாறுகிறது. இதனால் மூளையின் ஃபிட்னஸ் வயது வித்தியாசமின்றி அதிகரிக்கிறது. 

உடற்பயிற்சியினால் சிந்திக்கும் திறன் வயது வித்தியாசம் என்ற கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------