முகப்பு »  நலவாழ்வு »  பொல்யூஷனிலும் உடற்பயிற்சி உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

பொல்யூஷனிலும் உடற்பயிற்சி உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

போக்குவரத்து மாசு பாட்டில் அதிக அளவிலான நைட்ரஜன் டை ஆக்சைடு; மாரடைப்பை ஏற்படுத்தலாம், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த ஆபத்து குறைவாக உள்ளது

பொல்யூஷனிலும் உடற்பயிற்சி உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

அதிகமான போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதியில் வாழ்ந்தாலும், வழக்கமாக உடற்பயிற்சிகளை செய்யும் மக்கள், முதல் மற்றும் அடுத்தடுத்ததாக வரும் மாரடைப்பில் இருந்து தப்பிக்கிறார்கள் என ஒரு புதிய ஆய்வு தெரிவித்திருக்கிறது. போக்குவரத்து மாசு பாட்டில் அதிக அளவிலான நைட்ரஜன் டை ஆக்சைடு இருக்கிறது இது மாரடைப்பை ஏற்படுத்தலாம். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த ஆபத்து குறைவாக உள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. "காற்று மாசுபாட்டில் கூட உடற்பயிற்சி செய்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது" என்று கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் முன்னனி எழுத்தாளரான நடின் குப்செச் கூறினார்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், டென்மார்க், ஜெர்மனி  மற்றும் ஸ்பெயினில் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்புற உடல் செயல்பாட்டை (விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் தோட்டக்கலை) 50-65 வயதுடைய 51,868 பேரிடம் பரிசோதித்தனர். 

ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்புக்கு எதிரான சுய நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறை காரணிகளை ஒப்பிட்டு, சராசரி NO2 வெளிப்பாட்டை மதிப்பிட்டனர். அவர்கள் ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் தேசிய போக்குவரத்து மாசுபடுத்தல் கண்காணிப்பு தரவைப் பயன்படுத்தினர்.


வாரத்திற்கு நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதால் மீண்டும் வரும் மாரடைப்பிற்கான ஆபத்தை 31 சதவீதம் குறைக்கலாம், கூடவே அனைத்து வகையான உடல் செயல்பாடுகளையும் (ஒரு வாரத்திற்கு நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம்) ஒருங்கிணைத்து செய்யும் போது 58 சதவீதம் ஆபத்து  குறைகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

விளையாட்டுகளில் பங்கேற்றவர்களுக்கு ஆரம்ப மாரடைப்பு வாய்ப்பு 15 சதவிகிதம் குறைவாக இருந்தது. சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு 9 சதவிகிதம் ஆபத்து குறைவு என ஆராய்ச்சிகளர்கள் தெரிவித்தனர்.

குறைவான NO2 வெளிப்பாடு கொண்ட குடியிருப்பு வாசிகளிடம் ஒப்பிடும்போது, ​​அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருப்பவர்களுக்கு 17% முதல் மாரடைப்பு ஆபத்து உள்ளதாகவும், மீண்டும் வரும்  மாரடைப்புக்கு 39 சதவிகிதம் வாய்ப்புள்ளதாகவும் இதில் கண்டறியப் பட்டுள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------