முகப்பு »  நலவாழ்வு »  டயட் ட்ரிங்க் குடிக்கும் பழக்கமுள்ளவரா...? இந்த ஆபத்து நிச்சயம்

டயட் ட்ரிங்க் குடிக்கும் பழக்கமுள்ளவரா...? இந்த ஆபத்து நிச்சயம்

ஆய்வாளர்கள் அதிகளவு டயட் குளிர்பானங்களை குடிப்பதனால் மற்ற சில ஆரோக்கிய கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். 29 சதவிகிதத்திற்கு மேல் இதய நோய்கள் 16 சதவீதம் முன்கூட்டிய இறப்பு ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.

டயட் ட்ரிங்க் குடிக்கும் பழக்கமுள்ளவரா...? இந்த ஆபத்து நிச்சயம்

செயற்கையாக சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிக்கும்போது 23 சதவீதம் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

அன்றாடம் உணவு சாப்பிடுவதை தவிர்த்து டயட் ட்ரிங்கை குடித்து கலோரிகளை குறைக்கலாம் என்பது சாமர்த்தியமான வழியாக தோன்றலாம். ஆனால் புதிய ஆராய்ச்சி ஒன்று செயற்கையாக சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிக்கும்போது 23 சதவீதம் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிய வந்துள்ளது. அன்றாடம் 2 டயட் குளிர்பானத்தை குடிப்பதாக இருந்தால், பெண்களுக்கு 31 சதவிகிதம் பொதுவான வகை ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்தத்தில் அடைப்பு ஏற்பட்டு மூளைபக்க வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆய்வு 50 மற்றும் அதற்கு மேல் உள்ள 81,714 பெண்களின் 12 வருட சுகதார தகவல்கள் பற்றிய பகுப்பாய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் வாரம் ஒரு முறை டயட் குளிர்பானங்களை குடிப்பவர்களுக்கும் தினமும் 2 குளிர்பானங்களை குடிப்பவர்களையும் ஒப்பிட்டு கண்டறிந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு செயற்கை சுவையூட்டப் பட்ட குளிர்பானம் மட்டுமென பிரத்யேகமாக எதையும் அடையாளம் காணவில்லை. 

ஆய்வாளர்கள் அதிகளவு டயட் குளிர்பானங்களை குடிப்பதனால் மற்ற சில ஆரோக்கிய கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். 29 சதவிகிதத்திற்கு மேல் இதய நோய்கள் 16 சதவீதம் முன்கூட்டிய இறப்பு ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கூடுதலாக கறுப்பு இன பெண்களுக்கு பக்கவாதம் மற்றும் ஒபிசிட்டி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இரண்டு மடங்குகாகிறது. ஆராய்ச்சியாளரகள் கலோரிகள் ஏதுமில்லாத தண்ணீர் மற்றும் செய்ற்கை இனிப்பு சுவையூட்டப்படாத கார்பனேட்டடு குளிர்பானங்களை குடிக்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com