முகப்பு »  நலவாழ்வு »  ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சிம்பிள் டயட்!!

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சிம்பிள் டயட்!!

ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் ஆப்பிள், கேரட், காபி, ஃப்ளாக்ஸ் சீட், பூண்டு, பால், கீரை ஆகியவற்றை சாப்பிடலாம்.

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சிம்பிள் டயட்!!

சிறப்பம்சங்கள்

  1. ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் மூச்சுப்பயிற்சி செய்யலாம்.
  2. குளிர்காற்று மூச்சுத்திணரலை ஏற்படுத்தும்.
  3. வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

மழைக்காலத்தில் மூச்சுத்திணரல், மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படும்.  ஆரோக்கியமாக இருப்பவர்களை இந்த உடல் உபாதைகள் பாடாய்படுத்திவிடும்.  குறிப்பாக நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு இவை மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.  உலகளவில் நடத்தப்பட்ட ஆரோய்ச்சியில் 18 வயதிற்கு உட்பட்ட 7.1 மில்லியன் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.   உலக மக்கள் தொகையில் 300 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

bc6fmfe8

மழை மற்றும் குளிர்காலத்தின்போது, நுரையீரலின் சுவாச பாதையில் சளி உருவாகி வீக்கம் உண்டாவதால் சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது.  ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதன் பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  கார்டிகாஸ்டீராய்டை சுவாசித்தால் மூச்சுவிடுவதில் எவ்வித பிரச்னையும் இருக்காது.  குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளும் இதனை பயன்படுத்தலாம்.  


இந்த சுவாச பயிற்சியின் போது, 25 முதல் 100 மைக்ரோகிராம் அளவு இந்த கார்டிகாஸ்டீராய்டை பயன்படுத்தலாம்.  ஆனால் உணவு குழாய் வழியாக எடுத்து கொண்டால் 10000 மைக்ரோகிராம் அளவு தேவைப்படும்.  ஒவ்வொரு முறை இந்த மருந்தை உட்கொள்வதாலும் உடலுக்கு ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படும்.  ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் ஆப்பிள், கேரட், காபி, ஃப்ளாக்ஸ் சீட், பூண்டு, பால், கீரை ஆகியவற்றை சாப்பிடலாம்.  மேலும் முட்டை, கடலை, உப்பு, பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள், ஊறுகாய், ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் இறால் ஆகிய உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. 


 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com