முகப்பு »  நலவாழ்வு »  உயரம் என்றால் உங்களுக்கு பயமா: இதோ இருக்கிறது வி ஆர் முறையில் தீர்வு

உயரம் என்றால் உங்களுக்கு பயமா: இதோ இருக்கிறது வி ஆர் முறையில் தீர்வு

வி ஆர் தொழிற்நுட்பத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டவர்கள், உயரம் மீதான் பயத்தின் பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது

உயரம் என்றால் உங்களுக்கு பயமா: இதோ இருக்கிறது வி ஆர் முறையில் தீர்வு

சிறப்பம்சங்கள்

  1. உயரத்தைக் கண்டு பயப்படுவதற்கு அக்ரோபோபியா என்று பெயர்
  2. அக்ரோபோபியாவுக்கு வி ஆர் தொழிற்நுட்பம் கைகொடுப்பதாக தெரிவித்துள்ளனர்
  3. வி ஆர் என்பது விர்ச்சுவல் ரியாலிட்டி தொழிற்நுட்பம் என்பதாகும்
நம்மில் பலருக்கு உயரம் என்றால் பயத்தில் கால் உதற ஆரம்பித்துவிடும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.

உயரத்தைக் கண்டு பயப்படுவதற்கு அக்ரோபோபியா என்று பெயர். இதற்கு உளவியல் ரீதியாக விர்ச்சுவல் ரியாலிட்டி தொழிற்நுட்பத்தைக் கொண்டு தீர்வு காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பலரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், விர்ச்சுவல் தொழிற்நுட்பத்தைக் கொண்டு அவர்களிடம் பல விதங்களில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், உளவியலாளர்கள் நேரடியாக இந்த பிரச்னைக்கு கவுன்சிலிங் தருவதைக் காட்டிலும், இந்த தொழிற்நுட்பம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அக்ரோபோபியா உள்ள 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரு குழுவாகப் பிரிக்கப்பட்டனர். முதல் குழுவினருக்கு வி ஆர் முறையிலும், மற்றொரு குழுவினருக்கு உளவியல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இரண்டு வாரங்கள் நடத்தப்பட்ட இந்த பரிசோதனை முடிவில், வி ஆர் தொழிற்நுட்பத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டவர்கள், உயரம் மீதான் பயத்தின் பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------