முகப்பு »  நலவாழ்வு »  செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக்கும் 5 மூலிகைகள்!

செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக்கும் 5 மூலிகைகள்!

நம் வாழ்வியல் முறை, உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற தூக்கம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவற்றால் செரிமான மண்டலம் தன் ஆரோக்கியத்தை இழந்துவிடும்

செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக்கும் 5 மூலிகைகள்!

நம் வாழ்வியல் முறை, உடற்பயிற்சியின்மை, ஒழுங்கற்ற தூக்கம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவற்றால் செரிமான மண்டலம் தன் ஆரோக்கியத்தை இழந்துவிடும். அதிகபடியாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது, புகைப்பிடிப்பது மற்றும் மதுபழக்கத்தினால் உடல் ஆரோக்கியம் கெட்டு செரிமான மண்டலமும் சீராக செயல்படாமல் போகும்.

செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராக இல்லாத போது அஜீரணம், வயறு உப்புசம், வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் வயது மற்றும் உடல் ஆரோக்கியம் பொருத்து இவற்றில் வீரியம் அதிகமாக இருக்கும். உணவு பழக்கம் மற்றும் இயற்கை மூலிகைகளால் பொருட்களால் எப்படி இந்த பிரச்சனையை சரி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.

இஞ்சி
இந்திய சமையல்களில் பயன்படுத்தப்படும் இஞ்சி காரத்தன்மை மிகுந்தது. அஜீரண கோளாறுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும். வயிற்றில் கேஸ்ட்ரிக் அமிலம் மற்றும் செரிமான என்சைம்கள் சீராக சுரந்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஜீரண மண்டலத்தில் இருக்கக்கூடிய வாயுக்களை வெளியேற்றுவதில் இஞ்சிக்கு பெரும்பங்கு உண்டு.


மிளகு
மிளகில் பிப்பரின் என்னும் பொருள் இருக்கிறது. இவை உடலில் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும். வயிற்றில் பைல் அமிலத்தை சுரக்க செய்து உணவு பொருட்களை எளிதில் செரிக்க செய்யும். இவை ஜீரண மண்டலத்தில் இருக்கக்கூடிய வாயுக்களை வெளியேற்றி, வயிறு உப்புசத்தை போக்குகிறது.

திரிபலா
பெரிய நெல்லி, ஹரிடாகி, பிபிடாகி போன்றவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த திரிபலா சூரணம் வாயுத் தொல்லையில் இருந்து நம்மை விடுவிக்கும். செரிமான மண்டலத்தை சீராக இயக்கும். அஜீரணத்தை சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு.

சோம்பு
வாயை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். மேலும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் தன்மை இருப்பதால் குடல் பகுதியில் உள்ள இறுக்கங்களை போக்கி வாயுத் தொல்லையில் இருந்து நம்மை விடுவிக்கும்.

ஷங்கா பாஸ்மா
ஆயுர்வேத பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இதை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை, அஜீரணம் ஆகியவற்றை சரிசெய்யும்.
 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------