முகப்பு »  நலவாழ்வு »  விமான பயணத்திற்கு முன் சாப்பிடக்கூடாத 9 உணவுகள்

விமான பயணத்திற்கு முன் சாப்பிடக்கூடாத 9 உணவுகள்

பயணத்தின் போது எதை அணிய வேண்டும், எதை சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

விமான பயணத்திற்கு முன் சாப்பிடக்கூடாத 9 உணவுகள்

சிறப்பம்சங்கள்

  1. பொரித்த உணவுகள் நெஞ்சு எரிச்சலை உருவாக்கும்.
  2. பிரோக்கோலி, முட்டைக்கோஸ் கேஸினைஉருவாக்கும்
  3. விமான பயணத்தில் ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்

கோடைக்கால விடுமுறை தொடங்கி விட்டது. பல பயணங்கள் செல்ல திட்டமிட்டுருப்பீர்கள். அதற்காக வாங்க வேண்டியதை வாங்கி, பேக் பண்ணத் தொடங்கியிருப்பீர்கள். இதன் முடிவு என்பது எந்தவொரு சிக்கலும் இல்லாமல் பயணிப்பது மட்டுமே. பயணத்தின் போது எதை அணிய வேண்டும், எதை சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக விமான பயணம் என்றால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். விமானப் பயணம் செய்யும் நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாமா...

பொரித்த உணவுகள்

விமானம் ஏறுவதற்கு முன் உற்சாகத்தில் சில பர்கர்கள் மற்றும் பொரித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் மிகுந்த உணவுகள் நெஞ்செரிச்சலை உருவாக்கக் கூடும். பொரித்த உணவுகளில் சோடியம் அதிகளவில் இருக்கும், உடலில் தண்ணீர் சத்தை வற்றச் செய்து வயிறு உப்பலை உருவாக்கும்.


avoid fried food while flyingபிரோக்கோலி

மற்றொரு ஆரோக்கியமான உணவான பிரோக்கோலியை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். விமான பயணத்திற்கு முன் புரோக்கோலி, காலிஃப்ளாவர், முட்டைக்கோஸ் ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியம். இவை கேஸினை உருவாக்கூடிய காய்கறிகளாகும். 

avoid broccoli while flying

Photo Credit: NDTV Food

கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ்

பயணத்தின் போது ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம். அதற்காக கார்பனேட்டட் டிரிங்க்ஸ்களைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது நெஞ்சு எரிச்சல், கேஸ் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். தண்ணீரை மட்டும் அருந்தினால் போதுமானது.

avoid carbonated drinks while flying

ஆப்பிள்

ஆரோக்கியமானதாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமுள்ள ஒன்றாகும். பயணத்தின் போது செரிமானத்திற்கு சிரமமாக இருக்கலாம். இதனால் வயிறு உப்பல் மற்றும் கேஸ் ஆகியவற்றினால் தொல்லைகள் உருவாகலாம்.


avoid apples before flying

ஆல்கஹால்

உடல்  டிஹைட்ரேட் ஆவதற்கு ஆல்கஹால் காரணமாகிவிடும். இதனால் ஹேங் ஓவர் ஏற்படுவதால் விமான பயணத்தின் போது குடிப்பதை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.avoid alcohol while flying

பீன்ஸ்

புரதச் சத்து அதிகமுள்ள உணவு கேஸினை உருவாக்கி விடும். பயண நேரத்தில் நீங்கள் மட்டுமல்ல பிற பயணிகள் விமான கேபினுக்குள் சிரமப்படுவதை பார்க்கலாம். avoid beans while flying

இறைச்சி

இறைச்சி சாப்பிட்டால் செரிமான செய்ய கூடுதல் சிரமமாக இருக்கும். அதனால் பயண நேரத்தில் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 


avoid red meat while flying

காரமான உணவுகள் 

காரமான உணவை சாப்பிட்டால் அதனை எதிர்கொள்ள உடல் மிகவும் சிரமப்படும். வயிறு எரிச்சல் மற்றும் வேறு பல பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். அதனால் பயணத்தின் போது காரமான உணவைத் தவிர்க்க வேண்டும். avoid spicy foods while flying

காபி

காபியை விரும்புகிறவர்கள் எப்போதும் எந்த நேரமும் காபியை வேண்டாம் என்று சொல்வதேயில்லை. காபியில் உடலை டி ஹைட்ரேட் ஆக்கும் தன்மைகள் அதிகமுள்ளது. இதனால் தலைசுற்றல் ஆகியவை உருவாக வாய்ப்புகள் அதிகம். 

avoid coffee while travelling

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------