முகப்பு »  இருதயம் »  உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா… அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க

உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா… அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க

ஆராய்ச்சியாளர்கள், வேலைநேரத்திற்கு இடையில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினாலே போதும் அந்த உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா… அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க

Heat Health:இந்த உடற்பயிற்சி இரத்த அழுத்ததைக் சீராக்குகிறது.

கடுமையான வேலைக்களுக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா..? எளிதான உடற்பயிற்சிகளை தவிர்க்காமல் செய்வது நல்லது. 

ஆராய்ச்சியாளர்கள், வேலைநேரத்திற்கு இடையில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினாலே போதும் அந்த உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். இது குறித்த ஆராய்ச்சி ஒன்று உடற்பயிற்சியை எங்கும் எப்போது செய்தாலும் அது உடல் நலனை மேம்படுத்தவே செய்யும் என்பதை கண்டுபிடித்துள்ளது. “வேலையையும் உடற்பயிற்சியையும் ஒன்றிணைத்து செய்வது உடற்பயிற்சி செய்வதை எளிமையாக்குகிறது”என்று கனடாவிலுள்ள மாக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்டின் கிபாலா தெரிவித்துள்ளார். 

அன்றாடம் வேலைகளுக்கு நடுவே உங்களின்  அலுவலகத்திலோ அல்லது வீட்டின் மாடிப்படிகளிலே தீவிர நடை பயிற்சி செய்வது அது உடல் நலனைக் கொடுத்து வேலையில் இருக்கும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. 


சமீபத்திய ஆய்வு கடுமையான உடற்பயிற்சிக்கும், வேலைக்கு இடையில் செய்யும் உடற்பயிற்சிக்கு இடையே உள்ள பலன்களை சோதனை செய்ய முயன்றது. தொடர்ச்சியாக 10 நிமிடம் கடுமையான உடற்பயிற்சி செய்வதற்கும் வேலைகளுக்கு நடுவில் 10 நிமிடங்கள் மாடிப்படி ஏறி இறங்குவதும் ஒரே போல் கார்டியோரஸிட்டரி ஃபிட்னஸை மேம்படுத்துகிறது. இரண்டு வகையான உடற்பயிற்சியும் உடலுக்கு நன்மையை மட்டுமே தருகிறது.  இந்த ஆராய்ச்சியில் உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்தபடி வேலை பார்க்கும்  இளைஞர்களை ஒரு நாளைக்கு 3 முறை என்ற கணக்கில் மாடிப்படி ஏறப் பணித்தது. இந்தப் பயிற்சியை 6 வாரம் வரை மேற்கொண்டனர். 

இதில் கிடைத்த முடிவுகளை  உடற்பயிற்சியே செய்யாதவர்களுடன் ஒப்பிட்டபோது, இந்த உடற்பயிற்சி செய்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இனி நீங்கள் காபி குடிக்கப் போகும் போதோ அல்லது பாத்ரூம் பிரேக்கிலே உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள். இந்த உடல் பயிற்சியானது உடல் உழைப்பின்றி உட்கார்ந்தபடியே வேலைபார்ப்பவர்களின் உடல் நலனைவிட நிச்சயம் மேம்படுத்தும். இந்த உடற்பயிற்சி இரத்த அழுத்ததை சீராக்குகிறது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------